கம்பராமாயணம் 4564 · கிட்கிந்தா 12.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இருவினையும் - (நல்வினை தீவினைகளாகிய) இரண்டு வினை களையும்; இடைவிடா எவ் வினையும் - இடைவிடாமல் தொடர்பு கொண்டுள்ள எந்தக் கருமங்களையும்; இயற்றாதே - செய்யாமல்; இமையோர் ஏத்தும் திருவினையும் - தேவர்களும் புகழும் படியான நிறைந்த செல்வ வாழ்க்கையையும்; இடுபதம் தேர் சிறுமையையும் - (பிச்சையாக) இடும் சோற்றை எதிர்பார்த்திருக்கும் தாழ்வையும்; முறை ஒப்பத் தெளிந்து நோக்கி - சமமாகத் தெளிந்து பார்த்து; இப் பிறவிக்குக் கருவினையது என்று உணர்ந்து - இந்தப் பிறப்பு உண்டாவதற்கு மூலகாரணம் அந்த இருவினைகளேயாகும் என்று தெளிந்து; அது - அவ் வினையின் தொடர்பை; அங்கு - அந்த இடத்திலேயே; களையும் - நீங்குதற்குரிய; கடை இல் ஞானத்து - எல்லையற்ற தத்துவ அறிவினை யுடைய; அரு வினையின் பெரும்பகைஞர் - (போக்குவதற்கு) அரிய இருவினைகளுக்குப் பெரிய பகைவர்கள்; ஆண்டு உளர் - அம் மலையில் இருக்கின்றார்கள்; ஈண்டு இருந்தும் - அவர்கள் (நேரில் செல்லாமல்) இங்கிருந்த படியும்; அடி வணங்கற் பாலார் - (திசை நோக்கி) தொழுவதற்கு உரியவராவர்.
இருவினை - நல்வினை தீவினை. இவ் வினைகளே பிறப்பிற்குக் காரணமாகும் யோக ஞான நெறிகளால் இருவினை கடந்து ஆன்ம பக்குவம் பெற்று வினைகளை வென்ற ஞானியரை வினைப்பகைஞர் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Not doing any of the deeds that bind without pause, neither of the two kinds of karma, they look on the wealth the gods extol
- and on the lowliness that waits for food doled out as alms, weighing them alike with clear sight;
- knowing 'these two deeds are the seed of this birth', they root them out right there, men of boundless wisdom,
- the great foes of stubborn karma who dwell there; even from here they deserve worship at their feet.
What the poem says
Cukkirīvaṉ is sending the monkey host south to search for Cītai and describes the holy hill of Tiruvēṅkaṭam on their route. Its sages have stopped acting under the pull of good and bad karma, look on royal wealth and a beggar's poverty with the same eye, and know that karma is the seed of rebirth.
Such men are called the "foes of karma" because by yoga and wisdom they have conquered it. Cukkirīvaṉ says they are worthy of worship even from afar, bowing in their direction without going there.