கம்பராமாயணம் 4565 · கிட்கிந்தா 12.28

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தோதவத்தித் தூய்மறையோர் துறை ஆடும் நிறை ஆறும், சுருதித் தொல் நூல்
மாதவத்தோர் உறைவிடனும், மழை உறங்கும் மணித்தடனும், வான மாதர்
கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடு தொறும் கிளக்கும் ஓதை
போதகத்தின் மழக் கன்றும் புலிப் பறழும் உறங்கு இடனும் பொருந்திற்று அம்மா.

பொருள் · Meaning in Tamil

சூது அகற்றும் - வஞ்சனையை ஒழித்து நிற்கும்; திருமறையோர் - மனச் செம்மையுடைய அந்தணர்கள்; ஆடும் துறை - நீராடுகின்ற படித்துறைகள்; நிறை ஆறும் - நிறைந்துள்ள நதிகளையும், சுருதித் தொல் நூல் - வேதங்களாகிய பழமையான சாத்திரங்களையும் நன்றாக அறிந்த; மா தவத்தோர் - பெருந்தவ முனிவர்கள்; உறை இடமும் - வசிக்கின்ற ஆசிரமங்களையும்; மழை உறங்கும் மணித் தடமும் - மேகங்கள் படிகின்ற இரத்தினங்களைக் கொண்ட இடங்களையும்; வான மாதர் - தேவ மாதரின்; கீதம் ஒத்த - இசைப் பாட்டுக்கு நேரான; கின்னரங்கள் - கின்னரம் என்னும் இசைக் கருவிகளினுடைய; இன் நரம்பு - இனிய நரம்புகளை; வருடு தொறும் - தடவும் பொழுதெல்லாம்; கிளக்கும் ஓதை - எழுகின்ற ஓசையால்; போதகத்தின் மழக்கன்றும் - யானைகளின் இளங்கன்றுகளும்; புலிப் பறழும் - புலிக் குட்டிகளும்; உறங்கு இடனும் - (தம்முள் பகையின்றி) ஒருங்கே தூங்குகின்ற இடங்களையும், பொருந்திற்று - பொருந்தியுள்ளது (அத்திருவேங்கட மலை)

அம்மா - வியப்பிடைச் சொல்.

அந்த மலையில் தேவ கன்னியர் வந்து கின்னர வாத்தியங்களை இசைக்கின்றார்கள்; அவற்றிலிருந்து எழும் இன்னிசையைக் கேட்டுத் தம்முள் பகை கொள்ளும் இயல்புடைய யானைக் கன்றுகளும் புலிக் குட்டிகளும் பகைமை நீங்கி ஓரிடத்திலே தங்குமென்பது.

அந்த மலைச்சிகரங்கள் மேக மண்டலம் வரையில் உயர்ந்துள்ளனவாதலின் 'மழையுறங்கு மணித்தடன்' என்றார் கின்னரம் - ஒருவகை நரம்புக்கருவி; ஒரு வகையாழ். போதகம் - யானைக் கன்று. பகைமையையும் மாற்றவல்ல இசையின் பெருமை கூறப் பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Full rivers with ghats where holy Brahmins who have put away deceit bathe, and, versed in the ancient Veda,
  2. the great ascetics' dwellings; jewelled slopes where the rain-clouds sleep; and, as heavenly women
  3. stroke the sweet strings of kinnaram harps in tune with their song, at the sound that rises
  4. places where young elephant calves and tiger cubs sleep together: all these the hill holds, wonder!

What the poem says

Cukkirīvaṉ goes on describing Tiruvēṅkaṭam: rivers where pure-hearted Brahmins bathe, hermitages of sages learned in the Vedas, jewelled heights so tall that clouds rest on them.

Celestial women play the kinnaram, a stringed instrument, and the music is so sweet that elephant calves and tiger cubs, natural enemies, lie down and sleep side by side. The image praises music strong enough to end enmity. "Ammā" at the close is an exclamation of wonder.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cūtu akaṟṟum tiru maṟaiyōr tuṟai āṭum niṟai āṟum, curutit tol nūl
mātavattōr uṟai iṭamum, maḻai uṟaṅkum maṇit taṭamum, vāṉa mātar
kītam otta kiṉṉaraṅkaḷ iṉ narampu varuṭutoṟum kiḷakkum ōtai
pōtakattiṉ maḻak kaṉṟum pulip paṟaḻum uṟaṅku iṭaṉum poruntiṟṟu ammā.