கம்பராமாயணம் 4566 · கிட்கிந்தா 12.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கோடு உறு மால் வரை அதனை - சிகரங்கள் பொருந்திய பெரிய அம்மலையை (திருவேங்கட மலை; குறுகுதிரேல் - நெருங்குவீர் களானால்; உம் நெடிய கொடுமை நீங்கி - உங்களுடைய மிகக் கொடிய பாவங்கள் எல்லாம் நீங்க; வீடு உறுதிர் - உடனே முத்தி அடைவீர்கள்; ஆதலினால் - ஆதலால், விலங்குதிர் - (அதற்குள் புகாமல்) விலகிச் செல்லுங்கள்; அப்புறத்து நீர் மேவு தொண்டை நாடு - அதற்கு அப்பால் நீர் வளம் மிக்க தொண்டை நாட்டை, உறுதிர் - சென்று அடையுங்கள்; உற்று அதனை நாடுறுதிர் - அவ்வாறு சேர்ந்து அந்த நாட்டைத் துருவித் தேடிக் காணுங்கள்; அதன் பின்னை - அதன் பிறகு; நளி நீர்ப்பொன்னி - பெருமையுள்ள நீர் நிறைந்த பொன்னியென்னும் பெயர் கொண்ட; சேடு உறு - உயர்வான தோற்றமுள்ள; தண் புனல் தெய்வத் திருநதியின் - குளிர்ந்த நீர் நிரம்பிய தெய்வத்தன்மை பெற்ற காவிரி நதியின்; இரு கரையும் - இரண்டு கரைகளிலும்; தெரிதிர் - (சீதையை) ஆராய்ந்து தேடுங்கள்.
மாது, ஓ: ஈற்றசைகள்.
திருவேங்கடமலையில் புகுந்த அளவிலே இருவினைத் தொல்லைகளும் ஒழிந்து நீங்கள் முத்தியடைவீர்கள்; அவ்வாறு நீங்கள் முத்தியடைந்து விட்டால் சீதையைத் தேடும் செயல் நடைபெறாது. ஆதலால், அந்த மலைக்குச் செல்ல வேண்டா என்று சுக்கிரீவன் மறுத்துக் கூறினான் என்பது.
பொன்னி நதி: தான் பெருகும் பொழுது பொன்னைக் கொழித்துக் கொண்டு வருவதால் காவிரிக்குப் பொன்னி என்னும் பெயர் பொருந்திற்று. தன்னில் ஒரு கால் மூழ்கியவர்களுக்கும் பிறவிப் பிணியொழித்து நற்கதியளிக்கும் என்ற நம்பிக்கையால் காவிரியைத் தெய்வத் திருநதி என்றார். ஏழு புண்ணிய நதிகளில் காவிரியும் ஒன்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If you draw near that great peaked mountain, your long-standing sins will fall away
- and you will reach final release; so turn aside from it. Beyond it, reach the land of Toṇṭai rich in water;
- having reached it, search that land through; after that, of Poṉṉi with its abundant waters,
- that lofty, cool-flowing, divine and sacred river, search both the banks.
What the poem says
A playful twist: Cukkirīvaṉ tells the monkeys not to enter Tiruvēṅkaṭam at all. The hill is so holy that merely setting foot on it would wipe out their karma and grant them liberation, and liberated souls would never finish the search for Cītai.
They are to bypass it, comb the well-watered Toṇṭai country, and then search both banks of the Kāviri, called Poṉṉi, "the golden", because its floods wash down gold. It is counted among the seven sacred rivers, and a single dip in it is believed to free one from rebirth.