கம்பராமாயணம் 4568 · கிட்கிந்தா 12.31

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்றீரேல்
என்றும் அவன் உறைவிடமாம் ஆதலினான் அம்மலையை இடத்திட்டு ஏகிப்,
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திருநதி பின்பு ஒழிய, நாகக்
கன்று வளர் தடஞ்சாரல் மயேந்திர மா நெடுவரையும், கடலும், காண்டிர்.

பொருள் · Meaning in Tamil

தென் தமிழ்நாட்டு - தெற்குத் திசையில் தமிழ்நாடான பாண்டிய நாட்டிலுள்ள; அகன் பொதியில் - அகன்ற பொதிய மலையிலே நிலை பெற்ற; திருமுனிவன் - சிறந்த அகத்திய முனிவனது; தமிழ்ச்சங்கம் சேர்கிற்பீரேல் - தமிழ்ச்சங்கத்தைச் சேர்வீர்களாயின் (அம் மலையா அது); என்றும் அவன் உறைவிடம் ஆம் - எப்பொழுதும் அம் முனிவன் வாழ்ந்துவரும் இடமாகும்; ஆதலினால் - ஆதலால்; அம் மலையை இறைஞ்சி ஏகி - அந்தப் பொதிய மலையை வணங்கி அப்பாலே சென்று; பொன் திணிந்த புனல் பெருகும் - பொன் நிரம்பிய நீர் பெருகுகின்ற; பொருநை எனும் திருநதி பின்பு ஒழிய - தாமிரபரணி என்னும் அழகிய ஆறும் பிற்பட்டுப் போக, நாகக் கன்று வளர் - யானைக் கன்றுகள் வாழ்ந்து நிற்கும்; தடஞ்சாரல் மயேந்திரமாம் நெடுவரையும் - பெரிய தாழ்வரைகளையுடைய மகேந்திரம் என்னும் பெரிய மலையையும்; கடலும் - தென் கடலையும்; காண்டிர் - காண்பீர்கள்.

தமிழை வளர்த்த அகத்திய முனிவனுக்கு இருப்பிடமாதலால் பொதிய மலையை வணங்கிச் செல்லுமாறு சுக்கிரீவன் கட்டளையிட்டான். சங்கம்: புலவர் கூட்டம். அகத்திய முனிவன் வடதிசையிலிருந்து தமிழை வளர்க்கத் தென்திசை நோக்கி வந்தவனாதலால் அம் முனிவன் இருக்கும் இடத்தில் தமிழறிந்த புலவர் கூட்டம் நிரம்பியிருத்தல் இயல்பே. நாகம்: மலையில் வாழ்வது என யானைக்குக் காரணக்குறி. நாகக்கன்று - யானைக் கன்றுகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If you come upon the Tamil assembly of the holy sage on broad Potiyil in the southern Tamil land,
  2. since that is his dwelling for ever, bow to that mountain and go on;
  3. then, leaving behind the sacred river called Porunai, swelling with gold-laden water,
  4. you will see great, tall Mayēntiram with its wide slopes where elephant calves grow, and the sea.

What the poem says

In the Pāṇṭiya country the monkeys will reach Potiyil, the mountain home of the sage Akattiyaṉ, who came from the north and is honoured as the founder of Tamil learning; an assembly of Tamil poets gathers around him. They are to bow to the mountain and pass on.

Beyond lies the Porunai, the Tāmiraparaṇi river, said to carry gold in its waters, and then Mount Mayēntiram (Makēntiram) at the very tip of the land, with the southern ocean beyond it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1teṉ tamiḻ nāṭṭu akaṉ potiyil tiru muṉivaṉ tamiḻc caṅkam cērkiṟpīrēl
eṉṟum avaṉ uṟaiviṭam ām ātaliṉāl ammalaiyai iṟaiñci ēki,
poṉ tiṇinta puṉal perukum porunai eṉum tiru nati piṉpu oḻiya, nākak
kaṉṟu vaḷar taṭañ cāral mayēntira mā neṭu varaiyum, kaṭalum, kāṇṭir.