கம்பராமாயணம் 4569 · கிட்கிந்தா 12.32

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஆண்டு கடந்து, அலை உவரிக்கு அப்புறத்தும் ஒரு திங்கள் அவதி ஆகத் தேண்டி,
இவண் வந்து அடைதிர்; விடை கோடிர், கடிது 'என்னச் செப்பும் வேலை,
நீண்டவனும், மாருதியை நிறை அருளால் உற நோக்கி,'நீதி வல்லோய்!
காண்டி எனின், குறி கேட்டி!'என, வேறு கொண்டு இருந்து கழறல் உற்றான்.

பொருள் · Meaning in Tamil

ஆண்டு கடந்து - அந்த இடத்தைத் தாண்டிச் சென்று; அப்புறத்தும் இப்புறத்தும் - அதற்கு அப்பாலும் இந்த இடங்களிலும்; ஒரு திங்கள் அவதி ஆகத் தேண்டி - ஒரு திங்கள் முழுதும் அலைந்து (சீதையைத்) தேடி; இவண் வந்து அடைதிர் - இங்கு வந்து சேருங்கள்; கடிது விடை கோடிர் - விரைவாக விடை பெற்றுச் செல்லுங்கள்; என்னச் செப்பும் வேலை - என்று (சுக்கிரீவன்) வானரங்களுக்குக் கட்டளை யிட்ட போது; நீண்டவனும் - (திரிவிக்கிரம அவதாரத்தில்) திருமாலாகப் பேருருவம் கொண்டவனான இராமனும்; மாருதியை - அனுமனை நிறை அருளால் உற நோக்கி - முழுக் கருணையோடும் உற்று நோக்கி, நீதி வல்லோய் - நீதி நூல்களில் வல்லவனே; காண்டி எனின் - (சீதையைக்) காண்பாயானால் (இவள்தான் சீதையென்று தெளிவதற் காக); குறிகேட்டி - அவளுடைய அங்க அடையாளங்களை (நான் கூறக்) கேட்பாய்; என - என்று; வேறு கொண்டு இருந்து - (அவனைத்) தனியே அழைத்துச் சென்று ஓரிடத்திலிருந்து; கழறல் உற்றான் - (அந்த அடையாளங்களைக் சொல்லத் தொடங்கினான்.

சுக்கிரீவன் இவனாலேதான் செயல் கைகூடும் என்னும் குறிப்போடு அனுமனையே முதன்மையாகக் கொண்டு இவ்வளவும் கூறியதனாலும், தனக்கும் சுக்ரீவனுக்கும் முதலில் சொல்வன்மையால் நட்புச் செய்வித்தவன் அனுமனேயாதலாலும், சீதையைத் தேடிக் காணுதலாகிய தொழில் இவனாலேயே நிறைவேறுமென்று கருதி இராமனும் அனுமனைத் தனியிடம் கொண்டு சென்று கூறலாயினான். அவதி: காலவரையறை. கொள்திர் என்பது கோடிர் எனத் திரிந்தது. தேண்டி - தேடி என்பதன் விரித்தல்விகாரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Pass beyond that, search on that side and this with one month as your limit,
  2. then come back and gather here; take your leave, and go quickly.' As he said this,
  3. the Tall One looked on Māruti with full grace and said, 'You who are skilled in right conduct,
  4. if you find her, hear the signs', and, taking him apart, began to describe them.

What the poem says

Cukkirīvaṉ ends his orders: the search must be done within a month, and then everyone is to return. Now Irāmaṉ, called "the Tall One" because as Viṣṇu he once grew to fill the worlds in his Trivikrama form, turns to Aṉumaṉ.

Cukkirīvaṉ has addressed all his instructions mainly to Aṉumaṉ, and it was Aṉumaṉ's eloquence that first brought Irāmaṉ and Cukkirīvaṉ together. So Irāmaṉ trusts that he will find Cītai, takes him aside, and begins to describe her features so he can recognise her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āṇṭu kaṭantu, ap puṟattum ippuṟattum oru tiṅkaḷ avati ākat tēṇṭi,
ivaṇ vantu aṭaitir; viṭai kōṭir, kaṭitu' eṉṉac ceppum vēlai,
nīṇṭavaṉum, mārutiyai niṟai aruḷāl uṟa nōkki, 'nīti vallōy!
kāṇṭi eṉiṉ, kuṟi kēṭṭi!' eṉa, vēṟu koṇṭu iruntu kaḻaṟaluṟṟāṉ.