கம்பராமாயணம் 4571 · கிட்கிந்தா 12.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐய - ஐயனே! நிரை வளை மகளிர்க்கு எல்லாம் - வரிசையாக அணிந்த வளையல்களையுடைய பெண்களின் புறவடிகளுக் கெல்லாம்; உவமை ஆக - உவமானமாகுமாறு; மதி அறி புலவர் வாய்மையால் வைத்த - தமது நுண்ணறிவால் எல்லாவற்றையும் உணரவல்ல புலவர்கள் உறுதியாக அமைத்த; ஆமை ஆம் என்ற போதும் - ஆமையென்று சொன்னாலும்; அல்லன சொல்லினாலும் - அதுவல்லாத சுவடி முதலியவற்றைக் கூறினாலும்; யாம யாழ் மழலையாள்தன் - நள்ளிரவில் மீட்டப்படும் குறிஞ்சி யாழ் போன்ற மழலைச் சொற்களையுடைய சீதையின்; புற அடிக்கு - புறவடிக்கு (உவமையாகச் சொல்வது); இழுக்கம் - குறைவேயாகும்; நீர்மையால் உணர்தி - (இத் தன்மையை) நீ உன் தெளிந்த அறிவால் அறிவாய்.
மன், ஓ: ஈற்றசைகள்.
யாமயாழ் என்றது குறிஞ்சி யாழை. நள்ளிரவில் மீட்டப்படுவதாகலின் அப்பெயர் பெற்றது. 'யாமயாழ்ப் பெயர்க் குறிஞ்சி யாழும்' என்பது சேந்தன் திவாகரம். மகளிர் புறவடிகளுக்கு உவமையாக ஆமை சுவடி முதலியவற்றைக் கூறுவர். அத்தகைய பொருள்களும் தெய்வத் தன்மையுள்ள சீதையின் புறவடிகளுக்கு ஒப்பாகா என விலக்குவது இச்செய்யுள். எதிர்நிலையணி.
புறவடி - அடியினது புறம்: முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You will grasp this by your own good sense, my friend: for all women wearing rows of bangles,
- as a true likeness, poets of keen mind have set down
- the tortoise; yet saying that, or naming other things,
- only slights the upper foot of her whose prattle is like the midnight lute.
What the poem says
Irāmaṉ moves to the top of Cītai's feet. Poets traditionally compare the arched upper foot of a woman to a tortoise's shell, or to other curved objects, but for Cītai any such comparison would be an insult.
He calls her "the one whose speech is like the midnight lute", the yāmayāḻ, a name for the kuṟiñci lute played late at night, to evoke the soft sweetness of her voice. The verse rejects the stock comparison rather than offering a new one.