கம்பராமாயணம் 4572 · கிட்கிந்தா 12.35

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வினைவரால் அரிய கோதைப் பேதை மென் கணைக்கால், மெய்யே
நினைவரால் அரிய; இன்னும் நேர்படப் புலவர் போற்றும்
சினை வரால், பகழி ஆவம், நெல் சினை யேனும் செப்பம்;
எனைவரால் பகரும் ஈட்டம், யான் உரைத்து இன்பம் என்னோ?

பொருள் · Meaning in Tamil

வினைவரால் அரிய கோதைப் பேதை - ஓவியர்களால் தீட்டுவதற்கு அரிய கூந்தலையுடைய பேதைமைத் தன்மையுள்ளவளான சீதையின்; மென் கணைக்கால் - மெல்லிய கணுக்கால்கள்; மெய்யே - உண்மையாகவே; நேர்பட நினைவரால் அரிய நன்னீர் - ஊதிதது உணர்பவராலும் (உவமை கூறுவதற்கு) அரியனவான நல்ல இயல்புடையன; புலவர் போற்றும் - புலவர் உவமையாகப் பொருந்திக் கூறுகின்ற; சினைவரால் - கருக்கொண்ட வரால் மீனும்; பகழி ஆவம் - அம்பறாத் தூணியும்; சினை நெல் - சூல் கொண்ட நெற் பயிரும்; என்னும் - என்கின்ற; செப்பம் - சொற்கள்; எனைவரால் பகரும் - எல்லோராலும் சொல்லக் கூடிய; ஈட்டம் - தன்மையுடையன (அவற்றையே); யான் உரைத்து இன்பம் என்னோ - திரும்பவும் நான் எடுத்துக் கூறுவதால் வரும் இன்பம் யாதோ?

புலவர்கள், மகளிர் கணைக்காலுக்கு உவமையாகக் கூறிவருகின்ற வரால் முதலியவற்றையே சீதையின் கணைக் காலுக்கு நானும் உவமையாக எடுத்துச் சொல்வது சிறிதும் இன்பம் தராது என்பது. எதிர் நிலையணி. வினைவர்: ஓவியம் தீட்டுவோர் வினைவர், நினைவர் - வினையாலணையும் பெயர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The soft, rounded shanks of the innocent girl whose tresses no painter can render are truly
  2. beyond the power of thinkers to match; the likenesses poets praise as fitting,
  3. the roe-laden varāl fish, the arrow-quiver, the paddy stalk heavy with grain: such words
  4. are a common stock that anyone may utter; what joy is there in my repeating them?

What the poem says

Irāmaṉ comes to Cītai's lower legs. Poets usually compare a woman's shapely calves to a varāl fish full of roe, to an arrow-quiver, or to a swelling paddy stalk.

He refuses these stock images: everyone uses them, and repeating them for Cītai would give him no pleasure, since her beauty is beyond such ordinary comparisons. Her hair, he adds in passing, is beyond any painter's skill.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṉaivarāl ariya kōtaip pētai meṉ kaṇaik kāl, meyyē
niṉaivarāl ariya; naṉṉīr nērpaṭap pulavar pōṟṟum
ciṉai varāl, pakaḻi āvam, neṟ ciṉai eṉṉum ceppam;
eṉaivarāl pakarum īṭṭam, yāṉ uraittu iṉpam eṉṉō?