கம்பராமாயணம் 4573 · கிட்கிந்தா 12.36

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரம்பை என்று, அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின்
வரம்பையும் கடந்த போது, மற்று உரை வகுக்கல் ஆமோ?
நரம்பையும், அமிழ்தம் நாறும் நறவையும், நல்நீர்ப் பண்ணைக்
கரும்பையும் கடந்த சொல்லாள், கவாற்கு இது கருது கண்டாய்.

பொருள் · Meaning in Tamil

அளக மாதர் குறங்கினுக்கு - கூந்தலையுடைய பெண்களின் தொடைகளுக்கு; அரம்பை என்று அமைந்த - வாழைகள் என்று ஏற்பட்ட; ஒப்பின் வரம்பையும் - உவமையின் எல்லையையும்; கடந்த போது - (சீதையின் தொடைகள்) வென்றன என்றபோது; மற்று உரை வகுக்கல் ஆமோ - (அவற்றிற்கு) வேறு உவமைகளை எடுத்துக் கூற இயலுமோ? (இயலாது), நரம்பையும் - நரம்புகளையுடைய யாழினையும்; அமிழ்த நாறும் நறவையும் - அமிழ்தம்போல இனிமை விளங்கும் தேனையும்; நல் நீர்ப்பண்ணைக் கரும்பையும் - நல்ல நீர்வளமுள்ள வயல்களில் விளைந்த கரும்பின் சாற்றையும்; கடந்த சொல்லாள் - வெற்றி கொண்ட சொற்களையுடைய சீதையின்; கவாற்கு - தொடைகளுக்கு; இது - (முன்னர்ச் சுட்டிய) வாழைபோன்ற வேறு உவமைகள்; கருது கண்டாய் - (பொருந்தா என்பதை நீ) நினைந்து ஆராய்வாய்.

கண்டாய்: முன்னிலையசை; தேற்றமும் ஆகும். பெண்களின் தொடைகளைவிட வாழைகள் அழகில் சிறந்திருக்கும்; அந்த வாழைகளையும் சீதையின் தொடைகள் வென்றன என்றதால் அவற்றிற்கு வேறு உவமானப் பொருள் எடுத்துக் கூறல் அரியதாயிற்று.

நரம்பு: யாழுக்குச் சினையாகுபெயர். கரும்பு: அதன் சாற்றுக்கு இலக்கணை. கவான் - தொடை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The plantain is the likeness fixed for the thighs of women with curling hair;
  2. when hers pass even that limit, can any other word be framed? Of her whose speech surpasses
  3. the lute-string, honey with the fragrance of nectar, and the cane of well-watered fields,
  4. think on this for her thighs, you see.

What the poem says

Next, Cītai's thighs. The plantain stem is the classic likeness for a woman's thighs, and it is thought even lovelier than the thing it describes. Since hers surpass even the plantain, no other comparison is left.

Irāmaṉ again names her by her voice: her words are sweeter than the lute, than nectar-scented honey, than the juice of sugarcane from rich fields. He asks Aṉumaṉ to work out for himself that no likeness fits.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arampai eṉṟu, aḷaka mātar kuṟaṅkiṉukku amainta oppiṉ
varampaiyum kaṭantapōtu, maṟṟu urai vakukkal āmō?
narampaiyum, amiḻta nāṟum naṟavaiyum, nalnīrp paṇṇaik
karumpaiyum kaṭanta collāḷ, kavāṟku itu karutu kaṇṭāy.