கம்பராமாயணம் 4574 · கிட்கிந்தா 12.37

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வார் ஆழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள் தன்
தார் ஆழிக் கலைசார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய்!
பார் ஆழி பிடரில் தங்கும் பாந்தளும் பனி வென்று ஓங்கும்
ஓர் ஆழித் தேரும் ஒவ்வா உனக்கு நான் உரைப்பது என்னோ.'

பொருள் · Meaning in Tamil

தக்கோய் - சிறந்தவனே! வார் - கச்சு அணிந்த; ஆழி, கலசக் கொங்கை - சக்கரவாகப் பறவையையும் கலசத்தையும் போன்ற முலைகளையும்; வஞ்சிபோல் மருங்குலாள்தன் - வஞ்சிக் கொடி போன்ற இடையையுமுடைய சீதையின்; தார் - ஒழுங்கான; ஆழி - வட்ட வடிவமான; கலைசார் அல்குல் தடங்கடற்கு - மேகலையைச் சார்ந்துள்ள அல்குலாகிய பெரிய கடலுக்கு; உவமை - உவமிக்கக் கூடிய பொருளாக; ஆழி பார் பிடரில் தாங்கும் பாந்தளும் - கடல் சூழ்ந்த இப் பூமியைத் தன் தலையில் தாங்குகின்ற ஆதிசேடனது படமும்; பனி வென்று ஓங்கும் ஓர் ஆழித்தேரும் - பனியை அடக்கி மேலே உயர்ந்து விளங்குகின்ற ஒற்றை உருளையுடைய (சூரியனின்) தேர்த் தட்டும்; ஒவ்வா - பொருந்திவாரா; உனக்கு - (யாவும் தெரிந்த) உனக்கு; நான் உரைப்பது - நான் புதிதாகக் கூற வேண்டுவது; என்னோ - என்ன உள்ளது? (எதுவுமில்லை)

ஆதிசேடனது படத்தையும், கதிரவனின் தேர்த்தட்டையுமே சீதையின் அல்குலுக்கு உவமையாகக் கூறினும் பொருந்தா என்பது. சக்கரவாகமும் பொற்கலசமும் தனங்களுக்கு வடிவு பற்றிவந்த உவமைகள். ஓராழித் தேர் - ஒற்றைச் சக்கரமுடைய கதிரவன் ஊரும் தேர் ஆழி என்ற சொல் நான்கடிகளிலும் வந்துள்ளது. சொற் பின்வரு நிலையணி.

ஆழி - சக்கரவாகப் பறவை. கலை - ஆடையெனினும் அமையும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Of her whose banded breasts are like cakravāka birds and golden pots, whose waist is like the vañci creeper,
  2. for the wide sea of her hips, round and well-shaped and girdled, as a likeness, worthy one,
  3. neither the serpent that bears on its neck the sea-ringed earth, nor, rising and conquering the mist,
  4. the one-wheeled chariot will match; what is there for me to tell you?

What the poem says

Irāmaṉ turns to Cītai's hips, which he calls a wide sea. Her breasts are compared to the round cakravāka bird and to golden pots, her waist to the slender vañci creeper.

Even the greatest broad, round surfaces in the cosmos fail as likenesses for her hips: the spread hood of Ātiśēṣaṉ, the serpent who holds up the earth, and the platform of the sun's one-wheeled chariot. The Tamil plays on the word āḻi, which appears in all four lines with different meanings: the cakravāka bird, round, the sea, and wheel.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vār āḻik kalacak koṅkai vañcipōl maruṅkulāḷtaṉ
tār āḻik kalai cār alkul taṭaṅkaṭaṟku uvamai takkōy!
pār āḻip piṭaril tāṅkum pāntaḷum paṉi veṉṟu ōṅkum
ōr āḻit tērum ovvā uṉakku nāṉ uraippatu eṉṉō.'