கம்பராமாயணம் 4575 · கிட்கிந்தா 12.38

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சட்டகம் தன்னை நோக்கி - (சீதையின்) வடிவ அழகைக் கண்டு; யாரையும் சமைக்கத் தக்காள் - எத்தகைய அழகுள்ள பெண்களையும் (பிரமன் படைக்கத் தகுந்த பேரழகையுடையவளின்; இட்டு இடை இருக்கும் தன்மை - சின்ன இடை அமைந்துள்ள வகையை; இயம்பக் கேட்டு உணர்தி என்னின் - உவமை சொல்லக் கேட்டு நீ அறிய வேண்டுமென்றால் (அது முடியாது; ஏனென்றால்), கட்டு உரைத்து உவமை காட்ட - உறுதியாக எடுத்துச் சொல்லி உவமானப் பொருளைக் காட்டுவதற்கு; கண் பொறி கதுவா - (அந்த இடையைக்) கண்ணாகிய பொறியால் காணமுடியாது (அந்த இடை கண்ணுக்குப் புலனாகாது); கையில் தொட்ட - கைகளால் தீண்டித் துய்த்த, எற்கு உணரல் ஆம் - என்னால் மாத்திரமே (உண்டென்ற) அறியக் கூடும்; மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை - வேறு வகையில் உண்டு என்று சொல்வதற்கும் வழியில்லை.

அழகிய பெண்களைப் படைப்பதற்குப் பிரமன் முன்மாதிரியாகக் கொள்வது சீதையின் வடிவமே என்பது கருத்து. சீதையின் இடை பரிசவுணர்ச்சியின் மூலமாக என்னால் மாத்திரமே உண்டென்று உணரப் படுவது; ஒருவரின் கண்ணுக்குப் புலனாகாதவாறு மிகவும் நுண்ணியது; ஆதலால், அதற்கேற்ற உவமைப் பொருளை எடுத்துச் சொல்லுவது முடியாது என்பது. எத்துணை அழகுள்ள பெண்களைப் படைக்க விரும்பினாலும் பிரமன் இவளது வடிவத்தையே மாதிரியாக வைத்துப் படைக்குமாறு அழகோவியமாக உள்ளாள் சீதையெனச் சீதையின் பேரழகைக் குறித்தவாறு. சட்டகம் - வடிவு

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She, by gazing on whose form any woman at all could be fashioned:
  2. if you would learn by hearing how slight her waist is,
  3. the eye cannot catch it so as to show a likeness in firm words; only to me, who have touched it
  4. with my hands, can it be known; there is no other way even to say that it exists.

What the poem says

Cītai's form is the model the Creator, Piramaṉ, follows whenever he makes a beautiful woman. Her waist is so fine that the eye cannot see it at all, so no one can describe it or find a comparison for it.

Only Irāmaṉ, her husband, who has touched it, knows that it exists. The hyperbole of a waist too slender to see is a common one in Tamil poetry, here made intimate.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'caṭṭakam taṉṉai nōkki, yāraiyum camaikkat takkāḷ
iṭṭu iṭai irukkum taṉmai iyampak kēṭṭu uṇarti eṉṉiṉ,
kaṭṭuraittu uvamai kāṭṭa, kaṇpoṟi katuvā; kaiyil
toṭṭa eṟku uṇaralām; maṟṟu uṇṭu eṉum collum illai.'