கம்பராமாயணம் 4576 · கிட்கிந்தா 12.39

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொதுமை பார்க்கின் - பொதுநோக்காகப் பார்த்தால் (பெண்களின் வயிறு), ஆல் இலை - ஆலிலையையும்; படிவம் தீட்டும் ஐய நுண்பலகை - வடிவம் எழுதிய அழகிய மெல்லிய சித்திரப் பலகையையும்; நொய்ய பால் நிறத் தட்டம் - மிக மென்மையாயும் பால்போல வெண்ணிறமாயும் உள்ள வெள்ளித் தட்டினையும்; வட்டக் கண்ணடி - வட்ட வடிவமான கண்ணாடியையும், இன்ன பலவும் - இவை போல்வன பலவற்றையும், போலும் - ஒத்திருக்கும்; என்று உரைத்த போதும் - என்று கூறினாலும்; புனைந்துரை - (இவையெல்லாம்) இட்டுக் கட்டிச் சொல்லப் பட்டனவேயாகும்; ஏலும் என்று இசைக்கின் - (சீதையின் வயிற்றுக்கோ முன் கூறிய ஆலிலை முதலியன) பொருந்தும் என்றும் கூறினால்; ஏலா - அவை சிறிதும் பொருந்தாவாம், இது வயிற்று இயற்கை - இது (சீதையினது) வயிற்றின் இயல்பாகும்; இன்னும் - மேலும்.

மற்றைப் பெண்களின் வயிற்றுக்கு ஆலிலை முதலியவற்றை உவமை கூறினால் புனைந்துரையாகும்; அப்பொருள்களையே இச்சீதையின் வயிற்றுக்கு உவமை கூறினால் அவை உவமையாவதற்கே பொருந்தா என்பது. எதிர்நிலையணி. ஐய - (அழகிய) ஐ என்ற உரிச்சொல்லடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A banyan leaf, a fine and lovely board on which figures are painted, a delicate
  2. milk-white salver, a round mirror, and many such things:
  3. to say a woman's belly is like these is mere embellishment when one speaks of women in general;
  4. if one claims they fit hers, they do not. Such is her belly; and there is more.

What the poem says

For women in general, poets compare the smooth, flat belly to a banyan leaf, a painter's fine board, a silver plate or a round mirror, and even for them these are poetic exaggerations.

For Cītai, Irāmaṉ says, the same objects are not even good enough to count as comparisons. The closing "and more" leads into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āl ilai, paṭivam tīṭṭum aiya nuṇ palakai, noyya
pāl niṟat taṭṭam, vaṭṭak kaṇṇaṭi, palavum iṉṉa,
pōlum eṉṟu uraitta pōtum, puṉainturai; potumai pārkkiṉ,
ēlum eṉṟu icaikkiṉ, ēlā; itu, vayiṟṟu iyaṟkai; iṉṉum.'