கம்பராமாயணம் 4581 · கிட்கிந்தா 12.44

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கரும்பு கண்டாலும் மாலைக் காம்பு கண்டாலும் ஆலி
அரும்பு கண் தாரை சோர்வது அன்றி வேறு அறிவது உண்டோ?
கரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து உவமை சொல்ல
இரும்பு கண்டு அனைய நெஞ்சம், எனக்கு இலை; இசைப்பது என்னோ?'

பொருள் · Meaning in Tamil

கரும்பு கண்டாலும் - கரும்பைக் கண்ட பொழுதும்; மாலைக் காம்பு கண்டாலும் - வரிசையாகவுள்ள மூங்கிலைக் கண்ட போதும்; கண் அரும்பு - கண்களிலிருந்து; ஆலி தாரை சோர அழுங்குவேன் - மழைத் துளிபோன்ற நீர் தாரையாகப் பெருக மனம் வருந்துவேன்; அறிவது உண்டோ - (இவ்வாறு வருந்துவதல்லாமல்) (அவள் தோள்களுக்கு இணையாக ஏற்ற உவமையைத்) தேர்ந்து அறிதல் உண்டோ? (இல்லை); சுரும்பு கண்டு ஆலும் - வண்டுகள் கண்டு மொய்த்து ஒலிப்பதற்கு இடமான; கோதை தோள் நினைந்து - மாலையைத் தரித்த சீதையின் தோள்களை நினைத்து; உவமை சொல்ல - உவமை சொல்வதற்கு; இரும்பு கண்டனைய நெஞ்சம் - இரும்பு போன்ற வலிய மனம்; எனக்கு இல்லை - எனக்கு இல்லையே; இசைப்பது என்னோ: (நான்) உவமை கூறுவது எவ்வாறு?

ஓ - வினாப் பொருளில் வந்தது. சீதையைப் பிரிந்துள்ள இந்த நிலையில் கரும்பையும் மூங்கிலையும் காண நேரும்போதெல்லாம் சீதையின் தோள்கள் நினைவுக்குவரக் கண்ணீர் தாரை தாரையாய்ப் பெருக வருந்துவேன்; மிக மெல்லிய அச்சீதையின் தோள்களுக்குக் கடினமான கரும்பையும் மூங்கிலையும் உவமை கூற முடிந்ததே தவிர இன்னும் பொருத்தமான உவமை கூற இரும்புபோன்ற வன்னெஞ்சம் தனக்கு இல்லையே என்று இராமன் கூறினான். கரும்பும் மூங்கிலும்: வடிவமும் வழுவழுப்பும் மினுமினுப்பும்பற்றி அழகிய மகளிர் தோளுக்கு உவமையாயின. கோதை - ஆகுபெயர். ஒப்புடைய பொருள்களைக் கண்டு, பிரிந்தவர் வருந்துவது இயல்பாதலின் 'கண்தாரை சோர அழுங்குவேன்' என்று இராமன் வருந்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When I see sugarcane, when I see bamboo standing in rows, I grieve
  2. as tears like rain stream from my eyes; is there any working it out?
  3. To think of the shoulders of her, garlanded, where the bees swarm and hum, and name a likeness,
  4. I have no heart as hard as iron; what can I say?

What the poem says

Sugarcane and bamboo, smooth, rounded and glossy, are the standard likenesses for a beautiful woman's shoulders. But since losing Cītai, whenever Irāmaṉ sees them he is reminded of her and weeps.

To sit calmly and search for an apt comparison for her shoulders, which bees hover over for the scent of her garland, would need a heart of iron, and he does not have one. As often in Tamil love poetry, things that resemble the absent beloved cause the separated lover pain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'karumpu kaṇṭālum mālaik kāmpu kaṇṭālum āli
arumpukaṇ tārai cōra aḻuṅkuvēṉ aṟivatu uṇṭō?
karumpu kaṇṭu ālum kōtai tōḷ niṉaintu uvamai colla
irumpu kaṇṭaṉaiya neñcam, eṉakku illai; icaippatu eṉṉō?'