கம்பராமாயணம் 4580 · கிட்கிந்தா 12.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செப்பு என்பென் - (சீதையின் முலை) இரத்தினச் சிமிழ் என்று கூறுவேன்; கலசம் என்பென் - (பொறு) கும்பம் என்று கூறுவேன்; செவ் இளநீரும் தேர்வென் - செவ்விளநீர் என்று ஆராய்வேன்; துப்பு ஒன்று திரள் சூது என்பென் - பவழத்தில் கடைந்து செய்யப்பட்ட சொக்கட்டான் காயென்று கூறுவேன்; தும்பிக் கொம்பைச் சொல்லுவென் - யானையின் தந்தங்களைச் சொல்வேன்; தப்பு இன்றிப் பகலில் வந்த - தவறாமல் பகற்காலத்தில் வெளிப்பட்டுவந்த; சக்கரவாகம் என்பென் - சக்கரவாகமென்று கூறுவேன்; ஒப்பு ஒன்றும் உலகில் காணேன் - (என்றாலும் சீதையின் முலைகளுக்கு ஏற்ற) உவமைப் பொருள் ஒன்றையும் அறியாத நான்; பல நினைந்து - (இவ்வாறு) பலவாறாக நினைந்து (அவற்றுள் எதுவும் ஏற்ற உவமைப் பொருளாகாமையால்); இன்னும் உலைவென் - இன்னமும் வருந்துவேன்.
சக்கரவாகம்: சூரியக் கதிர்களையருந்தும் இயல்புடைய இணைபிரியாப் பறவை. இராமன் 'ஒப்பொன்றும் காணேன்' என்றமையால் அவற்றிற்கு அவையே ஒப்பு என்று கருதினான் என்பது - பொதுநீங்குவமையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- I would call them caskets; I would call them pots; I would think of red tender coconuts;
- I would call them dice rounded from coral; I would speak of an elephant's tusks;
- I would call them the cakravāka birds that come without fail by day;
- yet I see no likeness at all in the world, and thinking of many, I am still distressed.
What the poem says
Irāmaṉ lists the conventional likenesses for a woman's breasts: jewel caskets, golden pots, red tender coconuts, coral dice, an elephant's tusks, and the paired cakravāka birds, which appear by day and never separate.
He tries each in turn and rejects them all; he can find nothing in the world to match her, and the search only leaves him more troubled. The implication is that her breasts can be compared only to themselves.