கம்பராமாயணம் 4579 · கிட்கிந்தா 12.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அல்லி ஊன்றிடும் என்று - அகவிதழ்கள் பதிந்து உறுத்துமென்று; அஞ்சி - அச்சங்கொண்டு; அரவிந்தம் துறந்தாட்கு - தாமரையை விட்டு நீங்கிவந்த திருமகளாகிய சீதைக்கு; கோல வயிற்றில் - அழகிய வயிற்றினிடத்தில்; அம்பொன் வல்லி மூன்று உள - அழகிய பொன்னிறமான கொடியின் வடிவமாகிய மூன்று மடிப்புக்கள் உள்ளன; அவையும் - அந்த மடிப்புகளும், மார வில்லி - மன்மதனாகிய வில் வீரன்; மூன்று உலகினும் வாழும் மாதர் - மூன்றுலகங்களிலும் வசிக்கும் பெண்களெல்லாம்; தோற்ற மெய்ம்மை - (இச் சீதையின் அழகுக்குத் தோற்றுப்போன உண்மைச் செய்தியை; சொல்லி - எடுத்துச் சொல்லி; ஊன்றிய ஆம் - நிலைநிறுத்தனவாகிய; வெற்றி வரை என - வெற்றிக்கு அடையாளமாகத் தீட்டிய இரேகைபோல; தோன்றும் - விளங்கும்.
ஆல், மற்று, அன்று, ஏ: அசைகள். திருமகள் தாமரையைத் துறந்ததற்கு அல்லியூன்றலைக் காரணமாகக் கற்பித்தது ஏதுத்தற்குறிப்பேற்றவணி. சீதையின் வயிற்று மடிப்புகளை வெற்றியின் அறிகுறிக் கோடுகளாகக் கூறியது தன்மைத் தற்குறிப்பேற்றம். சீதையின் வயிற்றிலுள்ள மூன்று மடிப்புகளை மூவுலகிலுள்ள எல்லா மகளிரையும் வென்றதற்கு அறிகுறியாக மன்மதன் நாட்டி வைத்த மூன்று இரேகையாகக் குறித்தான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She who left the lotus, fearing its inner petals would prick her, has on her lovely belly three
- fine golden creeper-lines; and these appear as if the archer Māraṉ,
- proclaiming the truth that the women of all three worlds were defeated,
- had planted them as lines marking victory.
What the poem says
Cītai is Lakṣmī, the goddess who sits on a lotus, and the poet fancies that she left the lotus because its inner petals pricked her tender skin.
The three soft folds on her belly look like three victory lines drawn by Māraṉ, the archer god of love, to record that she has defeated the women of all three worlds in beauty. Both fancies supply imaginary causes, a favourite device of the poet.