கம்பராமாயணம் 4578 · கிட்கிந்தா 12.41

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால், வல்லி சேர் வயிற்றில்; மற்று என்
உயிர் ஒழுக்கு; அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்க வேண்டின்,
செயிர் இல் சிற்றிடையாய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீரக்
குயில் உறுத்து அமைய வைத்த கொள் கொம்பு என்று உணர்ந்து கோடி.

பொருள் · Meaning in Tamil

வல்லிசேர் வயிற்றில் - கொடி போன்ற சீதையின் வயிற்றிலே; மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டு - மயிரொழுங்கு என்ற ஒன்று உள்ளது; என் உயிர் ஒழுக்கு - (அஃது) எனது உயிரின் ஒழுக்கேயாகும்; அதற்கு வேண்டும் உவமை ஒன்று - அதற்கு யாவரும் ஒப்புக் கொள்ளத் தக்க ஓர் உவமையை; உரைக்க வேண்டின் - சொல்ல வேண்டுமானால் (அது முடியாது); செயிர் இல் சிறு இடையாய் உற்ற - (ஆயினும்) குற்றமற்ற நுண்ணிய இடையென்று அமைந்த; சிறு கொடி - சிறிய கொடியின்; நுடக்கம் தீர - தளர்ச்சி ஒழிய(ப் படருமாறு); குயிலுறுத்து - நன்றாகப் பதியும்படி; அமைய வைத்த - பொருந்த வைத்த; கொழு கொம்பு என்று - கொழு கொம்பாகு மென்று; உணர்ந்து கோடி - அறிந்து கொள்வாய்.

சீதையின் வயிற்றில் நெடுக உள்ளதை உலகத்தவர் மயிரொழுங்கு என்பார்கள்; ஆனால், அது மயிரொழுங்கன்று: எனது உயிரொழுங்காம் என்பது. இடைக்கு மேற்புறத்திலுள்ள அந்த வயிற்றின் மயிரொழுங்கிற்கு உவமைகூற இயலாது; ஆனால் இடையாகிய கொடி துவளாமல் படர்வதற்கு நாட்டிய கொழு கொம்பு போன்றது எனலாம் என்றான் இராமன். அவநுதி அங்கமாய தற்குறிப்பேற்றவணி. வல்லி - உவமையாகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the belly of her who is like a creeper there is a thing called the line of fine hair; but it is
  2. the line of my very life; and if I must speak a likeness fit for it,
  3. so that the little vine that is her flawless slender waist may cease to sway,
  4. know it as the prop-pole planted firmly and set in place for it.

What the poem says

Irāmaṉ speaks of the faint line of hair running up a woman's belly, a traditional mark of beauty. People call it a line of hair, he says, but for him it is the line of his own life.

If a likeness must be found, it is the stake a gardener drives into the ground for a young creeper to climb: her waist is the vine, and this line is the prop that keeps it from drooping. The figure first denies the ordinary name and then gives a fanciful reason for the feature.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mayir oḻukku eṉa oṉṟu uṇṭāl, valli cēr vayiṟṟil; maṟṟu eṉ
uyir oḻukku; ataṟku vēṇṭum uvamai oṉṟu uraikka vēṇṭiṉ,
ceyir il ciṟṟiṭai ām uṟṟa ciṟu koṭi nuṭakkam tīrak
kuyiluṟuttu amaiya vaitta koḻukompu eṉṟu uṇarntu kōṭi.