கம்பராமாயணம் 4583 · கிட்கிந்தா 12.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பிண்டி ஏலக்கோடு - அசோகமரத்தின் மணமுள்ள கிளைகள்; ஈன்ற இளந்தளிர் கிடக்க - தோற்றுவித்த இளந்தளிர்கள் ஒரு புறம் இருக்கட்டும்; யாணர்க் கோலக் கற்பகத்தின் காமர் குழை - புதிய அழகுள்ள கற்பக மரத்தின் விரும்பத் தக்க தளிர்களும்; கமலம் நறு மென்பூ - தாமரைக் கொடியில் தோன்றுகின்ற மெல்லிய மலர்களும்; நூல் ஒக்கும் மருங்குலாள்தன் - நூலைப் போல நுட்பமான இடையையுடைய சீதையின்; நூபுரம் புலம்பும் கோலக் காலுக்கும் - சிலம்புகள் ஒலிக்கும் அழகிய கால்களுக்கே; தொலையும் என்றால் - தோற்றுப் போகுமென்றால்; கைக்கு ஒப்பு வைக்கலாமோ - (அவற்றைக்) கைகளுக்கு உவமை கூறுதல் பொருந்துமோ?
ஓ - வினா. கற்பகத்தளிரும், தாமரை மலரும் சீதையின் தாழ்ந்த உறுப்பாகிய கால்களுக்கே இணையாகாமல் தோற்றனவென்றால் மேலான உறுப்பாகிய கைகளுக்கு ஒப்பாகாமல் அவை தோற்குமெனச் சொல்லவும் வேண்டுமோ? சொல்லவே தேவையில்லை என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Let the tender shoots put forth by the fragrant boughs of the aśōka lie aside; the fresh,
- lovely kaṟpakam tree's desirable young leaves and the soft, fragrant lotus flower:
- if, of her whose waist is like a thread, to the lovely feet where anklets chime
- they lose, can they be set as a likeness for her hands?
What the poem says
Young aśōka shoots, the tender leaves of the heavenly wish-granting kaṟpakam tree and the lotus are all used as likenesses for a woman's soft red hands.
But Irāmaṉ has already said these things fall short of Cītai's feet. If they lose even to her feet, the humbler part of the body, how can they be offered as likenesses for her hands?