கம்பராமாயணம் 4584 · கிட்கிந்தா 12.47

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெள்ளிய முறுவல் - வெண்மையான பற்களையும்; செவ்வாய் - சிவந்த வாயையும்; விளங்கு இழை - ஒளி விடுகின்ற அணிகலன்களையுமுடைய; இளம் பொன் கொம்பின் - இளமையான அழகிய பூங்கொம்பு போன்ற சீதையின்; வள் உகிர்க்கு - கூர்மையான நகங்களுக்கு; உவமை - உவமையாகக் கூடிய பொருள்களை; நம்மால் மயர்வு அற வகுக்கலாமோ - நம்மைப் போன்றவர்களால் மயக்கமில்லாமல் (தெளிவாக) எடுத்துக்கூற இயலுமோ? (இயலாது); கிள்ளைகள் - கிளிகள்; நீரே மூக்கை எள்ளுதிர் - (கல்யாண முருங்கைக் மலர்களைப் பார்த்து) நீங்கள் எமது மூக்கை (சீதையின் கைந்நகங்களுக்குப் பொருந்தாமை குறித்து) இகழ்கின்றீர்கள்; என்று கொண்டு - என்று மனத்தில் கொண்டு; இவறி - (அவற்றின்மேல்) கோபங்கொண்டு; முருக்கின் பூவை - அந்தக் கல்யாண முருங்கை மலர்களை (தம்மைப் பழிக்கும் மகளிர் வாயென்றே மயங்கி); என்றும் கிழிக்குமேல் - எப் பொழுதும் கிழிக்குமானால்; உரைக்கலாமோ - (கிளியின் மூக்கைச் சீதையின் கைந்நகங்களுக்கு உவமையாக) எடுத்துச் சொல்லலாமோ?

கல்யாண முருக்க மலரை மகளிர் வாய்க்கு உவமையாகக் கூறுதல் மரபு. கிளிகள் முருக்கமலரைத் தமது அலகால் இயல்பாகக் கோதும்; இத்தன்மைகளைக் கொண்டு தமது மூக்கைச் சீதையின் கைந்நகங்களுக்கு ஒப்பாகாது என்று பழிக்கும் பெண்களின் வாயென்று முருக்க மலரைக் கருதிக் கிளிகள் அவற்றிடம் கோபங் கொண்டு அவற்றைக் கோதிக் கிழிக்கின்றன என்றான். வெள்ளிய முறுவல் செவ்வாய்: முரண்தொடை. இவறுதல்: பொறாமையால் சினங்கொள்ளுதல். இச்செய்யுளில் மயக்கவணியை அங்கமாகக் கொண்ட ஏதுத ணை பள அ எதிர்நிலையணியும் அமைந்துள்ளன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. For the sharp nails of her, that young golden bough with white smile, red lips and gleaming jewels,
  2. can people like us frame a likeness without confusion?
  3. If the parrots, saying 'You scorn our beaks', bear a grudge and for ever
  4. tear at the flowers of the murukku tree, can one name their beaks?

What the poem says

A woman's red-tipped nails are usually compared to a parrot's curved red beak. Irāmaṉ turns this into a fanciful story.

The red blossoms of the murukku (coral) tree are a stock likeness for a woman's lips. Parrots peck at these flowers by habit, and Irāmaṉ imagines they do it out of spite, mistaking the blossoms for the mouths of women who mock their beaks as unworthy of Cītai's nails. With the parrots themselves admitting defeat, how could anyone compare her nails to their beaks?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veḷḷiya muṟuval, cev vāy, viḷaṅku iḻai iḷam poṟ kompiṉ
vaḷ ukirkku uvamai nammāl mayarvu aṟa vakukkalāmō?
"eḷḷutir nīrē mūkkai" eṉṟu koṇṭu, ivaṟi, eṉṟum,
kiḷḷaikaḷ, murukkiṉ pūvaik kiḻikkumēl, uraikkalāmō?