கம்பராமாயணம் 4585 · கிட்கிந்தா 12.48

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அங்கையும் அடியும் கண்டால் அரவிந்தம் நினையு மாபோல்,
செங்களி சிதறி, நீலம் செருக்கிய தெய்வ வாள் கண்
மங்கைதன் கழுத்தை நோக்கி, வளர் இளங் கமுகும், வாரிச்
சங்கமும், நினைதி யாயின், நவை என்று துணிதி தக்கோய்!

பொருள் · Meaning in Tamil

தக்கோய் - சிறப்பு வாய்ந்தவனே! அங்கையும் அடியும் கண்டால் - (சீதையின்) அழகிய கைகளையும், பாதங்களையும் பார்த்தால்; அரவிந்தம் நினையுமா போல் - செந்தாமரைப் பூவை நினைப்பது போன்று; செங் களி சிதறி - செம்மையான செவ்வரி படர்ந்து; நீலம் செருக்கிய - நீல நிறம் நிறைந்த; தெய்வ வாள் கண் மங்கைதன் - தெய்வத் தன்மையுள்ள வாள்போன்ற கண்களையுடைய சீதையின்; கழுத்தை நோக்கின் - கழுத்தைப் பார்த்து; வளர் இளங் கமுகும் - வளரும் தன்மையுள்ள பாக்குமரத்தையும்; வாரி சங்கமும் - கடலில் பிறக்கும் சங்கையும், நினைதி ஆயின் - (அவள் கழுத்துக்கு இணையாகும் என்று) எண்ணுவாயானால், அவை என்று துணிதி - (அந்தக் கமுகும், சங்குமே அச்சீதையின் கழுத்திற்கு) உவமையாகும் என்று உறுதி செய்வாய்.

செந்தாமரை - கைகளுக்கும், கால்களுக்கும் உவமைகள்; கமுகும் சங்கும் கழுத்துக்கு உவமை. திரட்சியிலும், வழுவழுப்பிலும் கழுத்துக்குக் கமுகு உவமை. குவளைமலர் நிறத்திலும், வாள் வடிவத்திலும், ஒளி செய்வதிலும் கூர்மையிலும், ஆடவரை வருத்துவதிலும் கண்களுக்கு உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Just as one thinks of the lotus on seeing her lovely hands and feet,
  2. so, of the lady whose divine sword-bright eyes are streaked with red and rich in blue,
  3. if, looking at her neck, you think of the young, growing areca palm and the sea's
  4. conch, then settle that these are its likeness, worthy one.

What the poem says

Here, unusually, Irāmaṉ allows a comparison. Just as her hands and feet bring the red lotus to mind, Cītai's neck will make Aṉumaṉ think of the smooth, round trunk of a young areca palm and of the conch shell with its spiral lines, and these are fair likenesses.

Her eyes are called sword-like: long, bright, sharp, faintly streaked with red and dark like the blue water-lily, and able to wound the hearts of men.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṅkaiyum aṭiyum kaṇṭāl aravintam niṉaiyumāpōl,
ceṅ kaḷi citaṟi, nīlam cerukkiya teyva vāṭ kaṇ
maṅkaitaṉ kaḻuttai nōkkiṉ, vaḷar iḷaṅ kamukum, vāric
caṅkamum, niṉaiti āyiṉ, avai eṉṟu tuṇiti takkōy!