கம்பராமாயணம் 4586 · கிட்கிந்தா 12.49

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பவளமும், கிடையும், கொவ்வைப் பழனும், பைங் குமுதப் பூவும்,
துவள்வில இலவம், கோபம், முருக்கு என்று இத் தொடக்கம் சாலத்
தவளம்'என்று உரைக்கும் வண்ணம் சிவந்து, தேன் ததும்பும் ஆயின்,
குவளை உண்கண்ணி வண்ண வாய் அது; குறியும் அஃதே.

பொருள் · Meaning in Tamil

குவளை உண் கண்ணி - கருங்குவளை போன்ற மைதீட்டப்பட்ட கண்களையுடைய சீதையின்; வண்ண வாய் அது - அழகிய வாயானது; பவளமும் கிடையும் - பவளமும் சிவந்த நெட்டியும்; கொவ்வைப் பழனும் - கொவ்வைக்கனியும்; பைங் குமுதப்போதும் - புதிய செவ்வல்லி மலரும்; துவள்வு இல இலவம் - துவண்டுபோகாத இலவமரத்தின் மலரும்; கோபம் - இந்திரக்கோபப் பூச்சியும்; முருக்கு - கல்யாண முருங்கை மலரும்; என்ற இத் தொடக்கம் - என்று கூறும் இவை முதலான உவமம் பொருள்கள்; சாலத் தவளம் என்று உரைக்கும் வண்ணம் - மிகவும் வெண்ணிறமானவை என்று சொல்லுமாறு; சிவந்து - மிகுதியாகச் செந்நிறம் பெற்று; தேன் ததும்பும் - தேன் நிரம்பியிருக்கும்; ஆயின் - என்றால்; குறியும் அஃது - அதற்கு உவமையாகக் கூறத்தக்க பொருளும் அதுவேயாகும்.

சீதையின்வாய் பவளம் முதலியவற்றினும் மிகச்சிவந்து தேன் ததும்புவதால், அப் பவளம் முதலியவை சீதையின் வாய்க்கு உவமையாகமாட்டா; அதற்கு அதுவே உவமையாகுமல்லாது வேறு உவமையில்லை என்பது. எதிர்நிலையணியை அங்கமாகக் கொண்டுவந்த இயைபின்மையணி. தேன்: இனிமைக்கு இலக்கணை. இலவ மலர்களின் இதழ்கள் தடித்திருக்குமாதலால் 'துவள்வு இல இலவம்' என்றார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Coral, the red pith, the kovvai fruit, the fresh red water-lily bud,
  2. the unwilting silk-cotton flower, the scarlet velvet-mite, the murukku blossom: this whole row
  3. it outreddens, so that one would call them quite white, and it brims with honey; that, then,
  4. is the lovely mouth of her with dark-lined lily eyes; and its likeness is itself.

What the poem says

Irāmaṉ piles up every red thing poets use for a woman's lips: coral, red pith, the kovvai fruit, the red water-lily, the thick-petalled silk-cotton flower, the scarlet indragōpa insect that appears after rain, and the murukku blossom.

Cītai's mouth is so much redder, and so full of sweetness, that beside it all of these would look white. So her mouth can only be compared to itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pavaḷamum, maiyum, kovvaip paḻaṉum, paiṅ kumutap pōtum,
tuvaḷvu ila ilavam, kōpam, murukku eṉṟu it toṭakkam cālat
tavaḷam' eṉṟu uraikkum vaṇṇam civantu, tēṉ tatumpum āyiṉ,
kuvaḷai uṇ kaṇṇi vaṇṇa vāy atu; kuṟiyum aḵtē.