கம்பராமாயணம் 4589 · கிட்கிந்தா 12.52

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஓதியும் எள்ளும் தொள்ளைக் குமிழும் மூக்கு ஒக்கும் என்றால்
சோதிசெய் பொன்னும் மின்னும் மணியும்போல் துளங்கித் தோன்றா;
ஏதுவும் இல்லை; வல்லோர் எழுதுவோர்க்கு எழுத ஒண்ணா
நீதியை நோக்கி நீயே நினைதியால், நெடிது காண்பாய்!

பொருள் · Meaning in Tamil

நெடிது காண்பாய் - (எதிர்காலத்தையும் கணிக்கும்) தொலை நோக்கு உடையவனே; ஓதியும் - பச்சோந்தியையும், எள்ளும் - எள் மலரையும்; தொள்ளைக் குமிழும் - தொளையுள்ள குமிழம் பூவையும்; மூக்கு - (சீதையின்) மூக்கானது; ஒக்கும் என்றால் - ஒத்திருக்கும் என்று சொன்னால் (அப்பொருள்கள்); சோதி செய் பொன்னும் - ஒளி வீசுகின்ற பொன்னையும்; மின்னும் மணியும் போல் - ஒளிவிடுகின்ற இரத்தினங்களையும் போல, துளங்கித் தோன்றா - விளங்கி காணப்படா; ஏதுவும் இல்லை - (அவ்வாறு ஒளி வீசுதற்குரிய) காரணமும் (அப் பொருள்களிடம்) இல்லை; எழுதுவார் வல்லார்க்கு - (இன்னும்) ஓவியம் தீட்டுவதில் திறமை பெற்றவர்களுக்கும்; எழுத ஒண்ணா - தீட்ட முடியாத, நீதியை நோக்கி - (மூக்கின்) இத் தன்மையை ஆராய்ந்து பார்த்து; நீயே நினைதி - (அதன் அழகை) நீயே உணர்ந்து கொள்வாய்.

சீதையின் மூக்கு, பொன் போலவும், இரத்தினம் போலவும் ஒளிவிடுகின்றதே, அவ்வாறிருக்க அம்மூக்கிற்குப் பச்சோந்தி முதலியன எவ்வாறு உவமையாகும்? உவமையாகமாட்டா. மேலும், ஓவியத்தில் எழுதமுடியாதவாறு பேரொளி மிகுந்து அழகு கூடியிருத்தலால் அதன் சிறப்புத் தன்மையை ஊகித்து அறிவாய் என்பது.

வேற்றுமையணியை அங்கமாகக் கொண்டு வந்த எதிர்நிலையணி. ஓதி - (ஓந்தி): இடைக்குறை. தொள்ளை - (தொளை : விரித்தல் விகாரம். ஒளியும் வடிவழகும் பெற்ற சீதையின் மூக்கிற்கு உவமையில்லை என்றவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If one says the chameleon, the sesame flower and the hollow kumiḻ bloom are like her nose,
  2. they do not shine out like radiant gold, like flashing lightning or gems;
  3. nor have they any cause to; consider its quality, which even skilled painters
  4. cannot paint, and judge it for yourself, you who see far.

What the poem says

For a woman's nose the poets offer the slender green chameleon, the sesame flower and the hollow kumiḻ blossom. Cītai's nose, Irāmaṉ says, glows like gold and gems, and these dull things have nothing in them that could shine like that.

Its beauty is beyond even skilled painters, so Aṉumaṉ, whose foresight Irāmaṉ praises, must picture it for himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōtiyum eḷḷum toḷḷaik kumiḻum mūkku okkum eṉṟāl
cōti cey poṉṉum miṉṉum maṇiyumpōl tuḷaṅkit tōṉṟā;
ētuvum illai; vallār eḻutuvārkku eḻuta oṇṇā
nītiyai nōkki nīyē niṉaitiyāl, neṭitu kāṇpāy!