கம்பராமாயணம் 4592 · கிட்கிந்தா 12.55

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கேள் ஒக்கின் அன்றி ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமால்;
கோள் ஒக்கும் என்னின் அல்லால் குறி ஒப்பக் கூறிற்று ஆமோ?
வாள் ஒக்கும் வடி கணாள் தன் புருவத்துக்கு உவமை வைக்கின்,
தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை, அநங்க சாபம்.

பொருள் · Meaning in Tamil

வாள் ஒக்கும் - வாள் போன்ற; வடிக் கணாள்தன் புருவத்துக்கு - கூர்மையான விழிகளையுடைய சீதையின் புருவங்களுக்கு; உவமை வைக்கின் - உவமையெடுத்துப் பொருந்திப் பார்த்தால்; கேள் ஒக்கும் அன்றி - உறவாக அமைந்த அவை தாங்களே ஒன்றுக் கொன்று உவமையாகுமே அல்லாமல்; ஒன்று - வேறொரு பொருளை; கிளத்தினால் - உவமையாகக் கூறினால், கீழ்மைத்து ஆம் - இழிந்த உவமையேயாகும் (மற்றும்); கோள் ஒக்கும் என்னின் அல்லால் - (பொதுவாகப் பெண்களின் புருவத்திற்கு உவமையாகும் பொருளையெடுத்துத் தன்) மனப் போக்கிற்குப் பொருந்தியுள்ளது என்று (சீதையின் புருவங்களுக்கு) உவமானமாகக் கூறினால் கூறலாமேயல்லாமல்; குறி ஒக்கக் கூறலாமோ - உவமைக் கருத்துப் பொருந்தக் கூற முடியுமோ? (முடியாது); தாள் ஒக்க வளைந்து நிற்ப - (மன்மதன் வில்லை உவமை கூறலாமென்றால்) இரண்டு முனையும் பொருந்துமாறு வளைந்து நிற்பனவாகிய, இரண்டு அனங்க சாபம் - மன்மதனுடைய இரண்டு விற்கள்; இல்லை - உலகத்தில் இல்லை (ஆதலால், அதுவும் உவமை கூறப் பொருந்தாது).

சீதையின் புருவங்கள் தம்மில் ஒன்றையொன்று ஒக்குமேயல்லாமல் வேறு ஓர் உவமைப் பொருளைப் பெறமாட்டா; ஒரு கால் ஏதாவது உவமானம் பொருளை என் மனப்போக்கின்படி கூறுகின்றேன் என்று கூறலாமேயல்லாமல் அந்த உவமை அப் புருவங்களுக்குப் பொருந்திய உவமையாகாது; இழிந்த உவமையேயாகும்; இனி, மன்மதனின் வில்லை உவமையாகக் கூறலாமென்றால், முனை வளைந்தனவாகிய இரண்டு விற்கள் மன்மதனிடம் இல்லையாகையால் அம் மன்மதன் வில் உவமை என்பது ஏற்புடைத்தாகாது என்பது.

இழிவுவமை: உயர்ந்த பொருளோடு இறப்ப இழிந்ததை உவமையாகக் கூறுவது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Except that each is like its partner, to name anything else would make it base;
  2. unless one says 'it suits my fancy', can one speak a likeness that hits the mark?
  3. If one sets a likeness for the brows of her whose sharp eyes are like swords,
  4. there are not two bows of the Bodiless One, bent so that their ends match.

What the poem says

Cītai's two eyebrows can be compared only with each other. Anything else would be a demeaning comparison, or a comparison made merely to suit the speaker's whim.

The natural likeness would be the bow of Kāma, the bodiless god of love, but he has only one bow, and she has two matching brows, curved evenly from end to end. So even that comparison fails.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kēḷ okkum aṉṟi oṉṟu kiḷattiṉāl kīḻmaittu āmē;
kōḷ okkum eṉṉiṉ allāl kuṟi okkak kūṟalāmō?
vāḷ okkum vaṭik kaṇāḷtaṉ puruvattukku uvamai vaikkiṉ,
tāḷ okka vaḷaintu niṟpa iraṇṭu illai, aṉaṅka cāpam.