கம்பராமாயணம் 4593 · கிட்கிந்தா 12.56

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நல்நாளும் நளினம் நாணும் நளிர் அடி நுதலை நாடிப்,
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி,
முன்நாளின் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி,
எந் நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமால்.

பொருள் · Meaning in Tamil

முன் நாளில் முளை வெண் திங்கள் - வளர்பிறையின் தொடக்கத்தில் தோன்றுகின்ற வெண்ணிறமான சந்திரன்; நல் நாளும் - நல்ல பகற்காலத்தில் கூட; நளினம் நாணும் - தாமரை மலரும் வெட்கப்படுவதற்குக் காரணமாக; நளிர் அடி - தளிர்போன்ற மெல்லிய அடிகளையுடைய சீதையினது; நுதலை - நெற்றியின் அழகிற்கு (பார்த்து); நாணி - வெட்கப்பட்டு; பல் நாளும் பன்னி - பல நாள்களும் (அதனையே) எண்ணியெண்ணி; ஆற்றா - பொறாமல்; மதி எனும் பண்பதாகி - மதியென்று சொல்வதற்கேற்ற சிந்திக்கும் தன்மையுடைதாய்; முழு நாளும் குறையே ஆக - (பதினாறு கலைகளும் நிரம்பவேண்டிய) பௌர்ணமியன்றும் கலை குறைவாகத் தோன்றி; எந் நாளும் வளராது - எந்த நாளிலும் வளராதிருக்குமானால்; இறை ஒக்கும் - (சீதையின் நெற்றிக்கு) ஒரு சிறிது உவமையாகும்; இயல்பிற்று ஆம் - தன்மையுடையதாகும்.

வளர் பிறையில் முதலில் தோன்றும் பிறைச்சந்திரன் சீதையின் நெற்றியழகை நினைந்து பொறாமைகொண்டு, தான் அதற்கு ஒப்பாகவேண்டுமென்று எண்ணிப் பல நாட்கள் சிந்தித்துப் பதினாறு கலைகளும் நிரம்பவேண்டிய பௌர்ணமியன்றும் தான் அவ்வாறாகாமல் பிறைச் சந்திரனாகவேயிருக்குமானால், அப்பொழுது அது சீதையின் நெற்றிக்கு ஒருபடி ஒப்பாகுமென்பது. முன்னாள் - முதல்நாள். முழுநாள் - பூர்ணிமை.

மதி தன் பெயருக்கு இணங்கப் பன்னாள், சீதையின் நுதற்கு உவமையாக வேண்டுமெனச் சிந்தித்தேயாக வேண்டுமெனக் கற்பித்துக் கூறப்பட்டது. ஏ வினாப்பொருளில் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Ashamed before the brow of her whose tender feet put the lotus to shame even on a bright day,
  2. pondering it for many days and unable to bear it, living up to its name, mati, the thinker,
  3. if the white crescent that sprouts on the first day stayed waning even on the full-moon day
  4. and never grew on any day, then it would have something of its nature.

What the poem says

The crescent moon is the usual likeness for a woman's forehead. Irāmaṉ imagines the young moon so jealous of Cītai's brow that it broods for days on how to match it.

The pun turns on mati, a Tamil word for the moon that also means mind or thought: the moon lives up to its name by thinking hard. Only if the crescent refused to wax, staying a sliver even on the full-moon night, would it come a little close to her forehead.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nal nāḷum naḷiṉam nāṇum naḷiraṭi nutalai nāṇi,
pal nāḷum paṉṉi āṟṟā mati eṉum paṇpatāki,
muṉ nāḷil muḷai veṇ tiṅkaḷ muḻunāḷum kuṟaiyē āki,
en nāḷum vaḷarātu eṉṉiṉ iṟai okkum iyalpiṟṟu āmē.