கம்பராமாயணம் 4597 · கிட்கிந்தா 12.60

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'புல் இதழ் கமலத் தெய்வப் பூவிற்கும் உண்டு; பொற்பின்
எல்லையின் மதிக்கும் உண்டாம் களங்கம், என்று உரைக்கும் ஏதம்;
அல்லவும் சிறிது குற்றம் அகன்றில; அன்னம் அன்ன
நல் இயலாளுக்கு எல்லாம் நலன் அன்றிப் பிறிது உண்டு அன்றால்.'

பொருள் · Meaning in Tamil

தெய்வக் கமலப் பூவிற்கும் - தெய்வத் தன்மையுள்ள தாமரைப் பூவிற்கும்; புல்லிதழ் உண்டு - பயனற்றதான (அதனை மேலே தழுவியுள்ள) புறவிதழாகிய குற்றமுண்டு; பொற்பின் எல்லையின் மதிக்கும் - அழகின் வரம்பாகிய சந்திரனுக்கும்; களங்கம் என்று உரைக்கும் ஏதம் - களங்கமென்று சொல்லுகின்ற குற்றம், உண்டாம் - உள்ளதாகும்; அல்லவும் - இவை அல்லாமல் மற்றுமுள்ள சிறந்த பொருள்களும்; சிறிது குற்றம் அகன்றில - சிறிதளவாவது குற்றம் இல்லாமல் இருக்கமாட்டா (ஒவ்வொரு பொருளுக்கும் ஓரளவாவது குற்றம் உண்டு); அன்னம் அன்ன நல் இயலாளுக்கு - அன்னப் பறவை போன்ற அழகிய நடையையுடையவளாகிய சீதைக்கு; எல்லாம் நலன் அன்றி - முழுவதும் நன்மையேயல்லாமல்; பிறிது உண்டாமோ - வேறொன்றாகிய குற்றம் உண்டோ? (இல்லை என்றவாறு). ஆல் - தேற்றம்.

தாமரைமலர்க்கும் புறவிதழாகிய குற்றமுள்ள; சந்திரனுக்கும் களங்கமாகிய குற்றம் இருக்கின்றது; இவ்வாறு. பல சிறப்பான குணங்களையுடைய உயர்ந்த பொருள்களிலும் ஏதேனும் குற்றம் இருத்தல் உலகவியல்பு: ஆனால் இச் சீதைக்கோ முழுவதும் குணமேயன்றிக் குற்றம் சிறிதுமில்லை என்பது. எடுத்துக் காட்டுவமையணி. திருமகள் தன்னிடத்தில் தங்குமாறு நிற்றலால் தாமரை மலரை 'கமலத் தெய்வப்பூ' என்றார் புல்லிதழ் - பண்புத் தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even the divine lotus flower has its useless outer petals; even the moon, the very limit of beauty,
  2. has the flaw that is called its stain;
  3. other things too are not free of some small fault; but for her of fair bearing like the swan,
  4. is there anything in her at all but goodness?

What the poem says

Even the finest things have some flaw: the sacred lotus, on which the goddess Lakṣmī dwells, has rough outer petals, and the moon, the very measure of beauty, has its dark spot.

Cītai, graceful as a swan, is the one exception: in her there is nothing but goodness. The verse sets her against these examples to show that she alone is flawless.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pullitaḻ kamalat teyvam pūviṟkum uṇṭu; poṟpiṉ
ellaiyiṉ matikkum uṇṭām kaḷaṅkam, eṉṟu uraikkum ētam;
allavum ciṟitu kuṟṟam akaṉṟila; aṉṉam aṉṉa
nal iyalāḷukku ellām nalaṉ aṉṟip piṟitu uṇṭākumō.'