கம்பராமாயணம் 4598 · கிட்கிந்தா 12.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐயா - ஐயா! பற்றி நோக்கின் - ஆராய்ந்துபார்த்தால்; மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம் - பெண்களுக்காகக் (அங்க இலக்கண நூலில்) கூறியுள்ள உத்தமவிலக்கணங்கள்; வண்ண வாசப் பங்கயத்தவட்கும் - மணமுள்ள அழகிய தாமரை மலரில் வாழ்பவளான திருமகளுக்கும்; நிரம்பல - நிரம்ப அமையவில்லை; செங்கயல் கருங்கண் - கயல்மீன்போன்ற அழகிய கருவிழிகளைக் கொண்ட கண்களையும்; செவ் வாய் - சிவந்த வாயையுமுடைய; தேவரும் வணங்கும் - தேவரும் வணங்குதற்கேற்ற சிறப்பு வாய்ந்த; தெய்வக் கொங்கை அக் குயிலுக்கு - தெய்வத் தன்மை கொண்ட முலைகளோடு கூடிய அந்தக் குயில் போன்ற சீதைக்கு; ஒன்றும் குறைவு இலை - (உத்தமவிலக்கணங்களில்) ஒன்றாவது குறைவுபடவில்லை; குறியும் அஃதே - (நீ அவளை அறிவதற்கு) அடையாளமும் அதுவே.
சீதை திருமகளைவிட நல்லிலக்கணம் நிரம்பியவள் என்பதாம். நல்லிலக்கணங்களில் ஒன்றும் குறைவில்லாமல் அவ்விலக்கணம் முழுவதும் நிரம்பியிருத்தலால் சீதை 'தேவரும் வணங்கும் தெய்வக் குயில் எனப்பட்டாள். செங்கயல் கருங்கண் செவ்வாய்: முரண் தொடை. குயில் - உவமவாகுபெயர். பங்கயத்தவட்கும், தேவரும்: உயர்வுசிறப்பும்மைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The marks of beauty set down in the books for women, even in her of the bright, fragrant
- lotus, sir, are not all complete; but if one looks closely,
- that cuckoo, with red-streaked dark eyes like carp, red lips, and divine
- breasts that the gods themselves revere, lacks not one of them; and that is the sign.
What the poem says
Treatises on bodily marks list the auspicious features of an ideal woman. Irāmaṉ claims that not even Lakṣmī, the lotus-dwelling goddess, has all of them, but Cītai lacks none.
This completeness, he tells Aṉumaṉ, is itself the sign by which he will know her. He calls her a cuckoo for her sweet voice.