கம்பராமாயணம் 4599 · கிட்கிந்தா 12.62

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'குழல் படைத்து யாழைச் செய்து குயிலொடு கிளியும் கூட்டி,
மழலையும் பிறவும் தந்து வடித்த கைம்மலரின் மேலான்,
இழைபொரும் இடையினாள் தன் இன்சொற்கள் இயையச் செய்தான்;
பிழையிலது உவமை காட்டப் பெற்றிலன்; பெறும் கொல் இன்னும்?'

பொருள் · Meaning in Tamil

குழல் படைத்து - வேய்ங்குழலையுண்டாக்கியும்; யாழைச் செய்து - யாழ்க் கருவியை வகுத்தமைத்தும், குயிலொடு கிளியும் கூட்டி - குயிலையும் கிளியையும் படைத்தும்; மழலையும் பிறவும் தந்து - (எழுத்து நிரம்பாத) மழலைச் சொல்லையும், இனிய சொற்களுக்கு உவமையாகும் பொருள்களை இயற்றியும்; வடித்ததை - பழகத் தேர்ந்த நயத்தை; மலரின் மேலான் - தாமரை மலரில் வாழ்கின்ற பிரமன் (பின்பு); இழை பொரும் இடையினாள்தன் - நூலிழையோடு மாறுபடுகின்ற நுண்ணிய இடையையுடைய சீதையின்; இன் சொற்கள் இயையச் செய்தான் - இனிய சொற்களுக்கும் பொருந்துமாறு அமைத்தான்; பிழை இலது - (ஆனால் அச்சொற்களுக்குக் குற்றமற்ற; உவமை காட்டப் பெற்றிலன் - உவமைப் பொருள் எதையும் உண்டாக்கவில்லை; இன்னும் பெறும் கொல் - இனிமேலாவது (அவன்) படைப்பானோ? (அறியாம்.

பிரமன் சீதையின் இன்சொற்களைப் படைப்பதற்காக முதலில் வேய்ங்குழல் முதலியவற்றைப் படைத்துப் பழகிக் கைதேர்ந்த பிறகே அச்சீதையின் சொற்களைப் படைத்தான்; ஆகவே, அவற்றிற்கேற்ற உவமப் பொருள்களை இதுவரையிலும் பிரமன் படைக்க வில்லை. குழல் முதலியவற்றின் இனிமை முழுவதும் சீதையின் சொற்களில் ஒருங்கே திரண்டுள்ளன என்பது. குழல், யாழ், குயில், கிளி - (ஒலிக்கு) முதலாகு பெயர்கள்.

ஒப்பு: 'பளிதமும் பாலும் ஒழுகிய தேனுமா ரமுதும் குயிலினில் குரலும் கிளியினில் மொழியும் மயிலியற் சாயல் வாணுதல் தனக்கு மலரயன் வகுத்த தேன்மொழியாள்' - (அரிக் புரா)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having made the flute, fashioned the lute, brought together the cuckoo and the parrot,
  2. and given prattle and the rest, the One upon the Flower took the skill he had refined
  3. and made the sweet words of her whose waist vies with a thread;
  4. a flawless likeness for them he has not yet managed to show; will he ever?

What the poem says

The Creator, Piramaṉ, who sits on the lotus, practised first: he made the flute, the lute, the cuckoo, the parrot and the prattle of children, and only when his hand was perfected did he create Cītai's sweet speech.

All the sweetness of those earlier works is gathered in her words, so nothing he has made can serve as their likeness. Irāmaṉ wonders whether he ever will make one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kuḻal paṭaittu yāḻaic ceytu kuyiloṭu kiḷiyum kūṭṭi,
maḻalaiyum piṟavum tantu vaṭittatai malariṉ mēlāṉ,
iḻai porum iṭaiyiṉāḷtaṉ iṉ coṟkaḷ iyaiyac ceytāṉ;
piḻai ilatu uvamai kāṭṭap peṟṟilaṉ; peṟumkol iṉṉum?'