கம்பராமாயணம் 46 · பால 2.26

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முட்டில் அட்டில் முழங்கு உற வாக்கிய
நெடும் உலை கழுநீர் நெடு நீத்தம் தான்,
பட்டம் மென் கமுகு ஓங்கு படப்பை போய்,
நட்ட செந்நெலின் நாறு வளர்க்கும் ஏ.

பொருள் · Meaning in Tamil

முட்டு இல் அட்டில் - (வேண்டும் பொருள்களில்) குறைவு இல்லாத சமையல் அறையில், முழங்குற வாக்கிய - ஒலித்தல் பெருகும்படி கீழே வடிக்கப்பட்ட; நெட்டுலைக் கழுநீர் - பெரிய உலையில் வைப்பதற்கு முன் (அரிசி) கழுவிய நீரின்; நெடு நீத்தம்தான் - மிக்க வெள்ளமானது; பட்டம் மென் கமுகு - நீரோடைக் கரையில் உள்ள பாக்கு மரங்கள்; ஓங்கு படப்பை போய் - உயர்ந்து வளர்ந்துள்ள சோலை வழியே சென்று; நட்ட செந்நெலின் நாறு வளர்க்கும் - வயலில் நடப்பட்டுள்ள செந்நெல் நாற்றுகளை வளர்க்கும்.

சமையலுக்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் நிறைந்திருத்தலின் 'முட்டு இல் அட்டில்' என்றார் அரிசி கழுவிக் கொட்டிய நீர் கமுகுத் தோட்டம் வழியே பாய்ந்து வயலில் நடப்பட்ட நெல் நாற்றுகளை வளர்க்கும் என்பதால், சமைக்கும் உணவின் மிகுதியையும் உண்போர் மிகுதியையும் உணர்த்தினார்.

பட்டம்: நீரோடை. கமுகு: பாக்கு மரம். முழங்கு(தல்) - முதனிலைத் தொழிற்பெயர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From kitchens that lack for nothing, poured out with a roar,
  2. the water that washed the rice for the great pots, a long, broad flood,
  3. runs through the gardens where tender areca palms rise beside the streams
  4. and nourishes the seedlings of red paddy planted in the fields.

What the poem says

The kitchens of Kōcalam are so well stocked and cook so much rice that the water used to wash the grain pours out with a roar. It flows like a river through the areca groves and waters the young paddy seedlings in the fields. The image conveys both how much food is cooked and how many people are fed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṭṭu il aṭṭil muḻaṅkuṟa vākkiya
neṭṭulaik kaḻunīr neṭu nīttamtāṉ,
paṭṭa meṉ kamuku ōṅku paṭappai pōy,
naṭṭa cen neliṉ nāṟu vaḷarkkumē.