கம்பராமாயணம் 4602 · கிட்கிந்தா 12.65

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாவின் இள நிறம் முதிரும் - (சீதையின் மேனி நிறத்திற்கு உவமை வேண்டுமானால்) மாமரத்தின் இளந்தளிரினது நிறம் முதிர்ந்து மாறும் இயல்பினது; பொன் நிறம் கருகும் - பொன்னின் நிறமும் (இவள் நிறத்துக்கு முன்பு) கறுத்துத் தோன்றும் (ஆகையால் மாந்தளிர் நிறம் முதலியன உவமையாகா; அவ்வாறே); மணி நிறம் உவமை போதா - இரத்தினங்களின் நிறமும் உவமையாவதற்கு ஏற்ற ஒளியுடையதாகாது; மின் நிறம் நாணி - மின்னலின் நிறமோ? (சீதையின் நிறத்தைக் கண்டு) வெட்கப்பட்டு; எங்கும் வெளிப்படா ஒளிக்கும் - எந்த இடத்தும் தலைகாட்டாமல் மறைந்து விடும், மலர் நிறம் சமழ்க்கும் - தாமரை மலரின் நிறமும் நாணும், எந்நிறம் உரைக்கேன் - (இவ்வாறுள்ளது என்றால்) வேறு எந்த நிறத்தை உவமையாகச் சொல்வேன்? வேண்டின் - (எப்படியாவது) உவமை கூறியேயாக வேண்டும் என்றால்; தன் நிறம் தானே ஒக்கும் - (சீதையின்) நிறம் தனக்குத் தானே ஒப்பாகும்.

மாந்தளிர் பொன், இரத்தினங்கள், மின்னல், தாமரை மலர் என்பவற்றை மகளிர் மேனி நிறத்துக்கு உவமை கூறுதல் கவி மரபு. ஆனால் இவற்றினும் சீதையின் மேனி நிறம் அழகில் விஞ்சியிருக்கும் என்பது. ஏதுத் தற்குறிப்பேற்றவணி. அன்றே: ஈற்றசை தேற்றமும் ஆம்; மற்றை: அசை மின்னல் இயல்பாகத் தோன்றி மறைவதைச் சீதையின் மேனி நிறத்தைக் கண்டு வெட்கப்பட்டு மறைவதாகக் கூறினான். சமழ்த்தல்: நாணுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. What colour shall I name? The tender hue of mango leaves grows old; and
  2. the hue of gold turns dark beside her; so the hue of gems will not serve as likeness;
  3. lightning, ashamed, hides and shows itself nowhere; if one must have one,
  4. her own colour matches itself alone; the flower's colour shrinks in shame, surely.

What the poem says

Poets compare a woman's complexion to young mango leaves, gold, gems, lightning or the lotus. Each fails for Cītai: the mango leaf's tint darkens with age, gold looks dull beside her, and gems lack her glow.

Lightning flashes and vanishes, and Irāmaṉ fancies it is hiding in shame after seeing her colour; the lotus too is abashed. Her complexion can only be compared to itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'en niṟam uraikkēṉ? māviṉ iḷaniṟam mutirum; maṟṟaip
poṉ niṟam karukum; eṉṟāl, maṇi niṟam uvamai pōtā;
miṉ niṟam nāṇi eṅkum veḷippaṭā oḷikkum; vēṇṭiṉ,
taṉ niṟam tāṉē okkum; malar niṟam camaḻkkum aṉṟē!'