கம்பராமாயணம் 4601 · கிட்கிந்தா 12.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நல்லோய் - நற்பண்புகளால் சிறந்தவனே! பூ வரும் - தாமரைப் பூவில் வாழும் தன்மையுள்ள; மழலை - மழலைச் சொற்களையுடைய; அன்னம் - அன்னப் பறவையும்; புனை மடப் பிடி - அழகிய இளைய பெண் யானையும்; என்று இன்ன - என்று சொல்லப்பட்ட இவை; தேவரும் மருளத்தக்க செலவின - தேவர்களும் கண்டு திகைக்கக் கூடிய (சிறந்த) நடையையுடையன; எனினும் - என்றாலும்; தேறேன் - (அவற்றைச் சீதையின் நடைக்கு உவமையாகக் கூறத்) தெளிவு கொள்ளேன்; பா வரும் - செய்யுள் இயற்றுவதில் பொருந்திய; கிழமைத் தொன்மைப்பருணிதர் - உரிமையுடைய பழமையான (புலமை மிக்க) புலவர்கள்; தொடுத்த - இயற்றிய; பத்தி - ஒழுங்கான; நா அரும் கிளவி - நாவில் எழுகின்ற அரிய சொற்களையுடைய; செவ்வி நடை வரும் நடையள் - காவியங்களின் அழகிய நடையை ஒத்த நடையையுடையவளாவாள்.
உலகத்துப் பெண்கள் நடைக்கு உவமையாகக் கூறப்படுகின்ற அன்னப் பறவை முதலியவற்றின் நடையைச் சீதையின் நடைக்கு ஒப்பாகுமென்று நான் சிறிதும் கருதமாட்டேன்; பழைய புலமை மிக்க புலவர்கள் இயற்றியுள்ள காவியங்களின் நடை ஒப்பற்று விளங்குவதுபோல இந்தச் சீதையின் நடையும் ஒப்பற்று விளங்கும் என்பது. நடை வரு நடை - வரு: உவம உருபு. நூலிலும் நடையுண்டு; பெண்களுக்கும் நடையுண்டு ஆதலால், நூலின் நடை சீதையின் நடைக்கு உவமை கூறப்பட்டது. பருணிதர் - புலவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The prattling swan that dwells among the lotuses, the graceful young she-elephant: things such as these,
- though their gait might bewilder the gods, do not satisfy me;
- her walk moves like the ordered verse that ancient poets, masters of song, have composed,
- with its rare words upon the tongue and its lovely flow of style, good one.
What the poem says
The swan and the young she-elephant are the stock likenesses for a graceful woman's walk, and even the gods marvel at their gait. Irāmaṉ is not content with them.
Instead he plays on the Tamil word naṭai, which means both a person's gait and the style or flow of a literary work. Cītai's walk, he says, has the matchless flow of a classic poem composed by the great poets of old.