கம்பராமாயணம் 4604 · கிட்கிந்தா 12.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முன்னை நாள் - முன்னாளில்; முனியொடு - விசுவாமித்திர முனிவருடன்; முதிய நீர் மிதிலை வாய் - நீர்வளம் உள்ள பழமையான மிதிலா நகரத்தில்; சென்னி நீள் மாலையான் - தலையில் நீண்ட மாலை புனைந்தவனான சனக மன்னனது; வேள்வி காணிய - யாகத்தைக் காண்பதற்காக; செல - (நான்) சென்றபோது; அன்னம் ஆடும் துறைக்கு அருகு - அன்னப் பறவைகள் (தத்தம் பேடைகளுடன்) விளையாடும் நீர்த்துறைக்கு அருகிலுள்ள; அக் கன்னி மாடத்திடை - அந்தக் கன்னிகா மாடத்தின் உப்பரிகையில்; நின்றாளை - நின்று கொண்டிருந்த சீதையை; கண்டதும் - பார்த்ததையும்; கழறுவாய் - (நீ அவளிடம் கூறுவாய்.
விசுவாமித்திர முனிவன் இராமஇலக்குவரைத் துணையாக வைத்துக் கொண்டு தனது வேள்வியை முடித்த பின்பு மிதிலையில் சனக மன்னன் செய்யும் யாகத்தைக் காண்பதற்காக அவர்களுடன் சென்றான்; மிதிலையில் புகுந்த பின்பு சனக மன்னனது அரண்மனையைச் சூழ்ந்துள்ள அகழியின் அருகேயுள்ள கன்னி மாடத்தின்மேல் சீதையிருக்க அவளைத் தான் கண்டதை இராமன் அடையாளமாக எடுத்துக் கூறுகின்றான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Long ago, when with the sage I went to ancient Mithilai, rich in water,
- to see the sacrifice of the king who wears a long garland on his head,
- she was standing near the ghat where the swans play; that I saw her
- there in the maidens' mansion, tell her that.
What the poem says
Now Irāmaṉ gives Aṉumaṉ private memories that only he and Cītai share, so that she will trust the messenger. The first is their first sight of each other.
When Irāmaṉ came to Mithilai with the sage Vicuvāmittiraṉ to see King Caṉakaṉ's sacrifice, he glimpsed Cītai standing on the balcony of the maidens' palace beside the moat, where swans played. In Kampaṉ's telling the two fall in love at this glance, before the bow contest.