கம்பராமாயணம் 4613 · கிட்கிந்தா 13.2

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1குன்று இசைத்தன எனக் குலவுதோள் வலியினார்
மின் திசைத்திடும் இடைக் கொடியை நாடினர் விராய்
வன்திசைப் படரும் ஆறு ஒழிய, வண் தமிழ் உடைத்
தென் திசைச் சென்றுளார் திறன் எடுத்து உரை செய்வாம்.

பொருள் · Meaning in Tamil

குன்று இசைத்தன என - மலைகளே பொருந்துமாறு வைக்கப் பட்டுள்ளன வென்னும்படி,; குவவுதோள் வலியினார் - அமைந்த திரண்ட தோள்வலிமையுடைய வானரவீரர்கள்; மின் திசைத்திடும் - மின்னலும் திகைக்கும் படியான; இடைக் கொடியை விராய் நாடினர் - இடையையுடைய பூங்கொடிபோன்ற சீதையைத் தேடினவர்களாய்; வன்திசைப்படரும் ஆறு - (கிழக்கு, மேற்கு, வடக்கு என்ற மூன்று) திசைகளிலே செல்லுகின்ற வகை; ஒழிய - தவிர்த்து; வண்தமிழுடைத் தென்திசை - வளமான தமிழ்மொழி வழங்கும் தெற்குத்திசை; சென்றுளார் - சென்றவராகிய வானர வீரர்களின்; திறன் எடுத்து உரை செய்வாம் - செயல்திறனை எடுத்துச் சொல்லுவோம்.

மற்றைத் திசைகளிற் சென்ற வானரர் செய்தி கதைப் போக்கிற்கு வேண்டுவதில்லையாதலால் அதைத் தவிர்த்து, இக் கதைக்கு மிக இன்றியமையாததாகிய தென்திசைக்கண் சென்ற வானர வீரர் செயலைக் கூறுகின்றார் என்றுமுள தென்தமிழாதலானும், உலகிலே இலக்கண வரம்பிலா மொழிகள் போலல்லாமல் இலக்கண வளமுடைமையானும், திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலான மொழிகளுக்குத் தாயெனக் கருதப்படுவதாலும், சொல்வளம், பொருள்வளம், இனிமை எளிமை முதலியன உண்மையானும் சமய குரவர்களும் ஆழ்வார்களும் இறைவனைப் பாடிப்பரவியது தமிழ் மொழியே யாதலினாலும் 'வண்டமிழ்' என்றார்

சீதையைக் காண்டற்கியையாததாதலின் தென்திசை யொழிந்த மூன்றையும் 'வன்திசை' யென்றும், இனிய தமிழ் வழங்கும் திசையாதலின் 'தென்திசை' யென்றும் கூறினார்.

ஆசிரியர்தம் நாட்டுப்பற்றும், ட்டை டன். இப்பாடலிற் பொங்கித் ததும்புவதைக்காணலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Of those mighty ones whose massed shoulders seemed like hills set in place,
  2. who scattered, searching for the creeper whose waist bewilders the lightning,
  3. leaving aside the ways of those who went to the harsh quarters, of those who went
  4. to the southern quarter, home of rich Tamil, we shall tell the deeds.

What the poem says

The poet speaks in his own voice. He will not follow the search parties sent north, east and west, which matter little to the story, but only the southern one, which will find Cītai.

He calls the other three directions harsh, because they do not lead to her, and the south the land of rich Tamil. The commentary praises Tamil as an ancient language with a full grammar, regarded as mother of the other Dravidian languages and the tongue in which the Śaiva and Vaiṣṇava saints sang. It sees the poet's love of his land and language in this line.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṉṟu icaittaṉa eṉak kuvavu tōḷ valiyiṉār
miṉ ticaittiṭum iṭaik koṭiyai nāṭiṉar virāy
vaṉ ticaip paṭarum āṟu oḻiya, vaṇ tamiḻ uṭait
teṉ ticaic ceṉṟuḷār tiṟaṉ eṭuttu uraiceyvām.