கம்பராமாயணம் 4612 · கிட்கிந்தா 13.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
போயினார் - (அங்கதன் முதலிய வானர வீரர்கள் சுக்கிரீவனுடைய கட்டளைப்படி தென் திசை நோக்கிக் சென்றார்கள்; போன பின் - (அவர்கள் அவ்வாறு) சென்ற பின்பு; இரவி காதலனும் - சூரியன் மகனான சுக்கிரீவனும், புற நெடுந் திசைகள் தோறும் - (தென்திசைக்குப்) புறம்பான பெரிய பிற திசைகளில் எல்லாம்; ஏயினான் - (விநதன் முதலிய பல வீரர்களை) விடை கொடுத்தனுப்பினான்; ஏயின பொருட்கு - (சுக்கிரீவன்) ஏவின தொழிலாகிய சீதையைத் தேடுவதற்கு; ஆயினார் அவரும் - இசைந்தவரான அந்த வானர வீரரும்; உலகினைத் தகைநெடுந் தானையார் - உலகத்தையே (தமது வன்மையால்) எதிர்த்துத் தடுக்கவல்ல பெருஞ்சேனையை உடையவர்களாய், அன்ன நாள் அவதியில் - (தம் அரசனான சுக்கிரீவன் குறித்த) அந்த ஒரு மாதத் தவணைக்குள் (தேடித் தருவதற்காக), தாயினார் - விரைந்து சென்றார்கள்.
மேற்கு, வடக்கு, கிழக்கு என்ற திசைகளில் இடபன், சதவலி, விநதன் என்ற வீரர்களை அனுப்பினான் என்பது. மூன்றாமடி : முற்றுமோனை. ஆங்கு: அசை.
உலகினைத் தகை நெடுந்தானையார்: உலகம் முழுவதும் எதிர்த்துவரினும் தடுத்துப் போர் செய்யவல்ல பேராற்றல் வாய்ந்த வானரவீரர் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They went; and after they had gone, to the other far quarters all around
- the Sun's dear son sent others as well; and they, for the task they were given,
- made ready; and within that span of days set for them,
- they bounded across the world, they of the great host able to hold back the world.
What the poem says
This verse opens a new canto, "Entering and Leaving the Cavern". Once the southern party had left, Cukkirīvaṉ, son of the Sun, sent other chiefs with their troops to the west, north and east: Iṭapaṉ, Catavali and Vinataṉ.
All of them hurried off to finish the search within the one month he had allowed. Their armies are said to be strong enough to hold back the whole world if it attacked them.