கம்பராமாயணம் 4615 · கிட்கிந்தா 13.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நவை இலார் - குற்றமற்ற அந்த வானர வீரர்கள்; அந்நெடுங் குன்றமொடு - உயர்ந்துள்ள அந்த விந்திய மலையினிடத்தில்; அவிர் மணிச் சிகரமும் - ஒளிவீசும் இரத்தினங்களையுடைய சிகரங்களையும்; பொன் நெடுங்கொடு முடிப் புரைகளும் - அழகான நீண்ட அந்தச் சிகரங்களிலுள்ள குகைகளையும், புடைகளும் - பக்கங்களையும்; நல் நெடுந் தாழ்வரை - அழகிய நீண்ட அடிவாரங்களையும்; ஓர் பகலிடை - ஒரு பகற்பொழுதுக்குள்ளாக; பல் நெடுங் காலம் ஆம் என்ன - மிகுதியான பல நாள்கள் தேடிக் காண்பது போன்று; நாடினார் - தேடினார்கள்.
வானரர்கள் மிகப் பலராயிருந்ததாலும், செய் தொழிலை மிக்க ஊக்கத்தோடு செய்ததாலும் பலகாலம் செய்யக்கூடிய பணிகளை ஒரு பகற்பொழுதிலேயே செய்துமுடித்தனர் என்பது.
குன்றமொடு : வேற்றுமை மயக்கம். புரை: துளை - இங்கே குகையைக் குறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On that lofty mountain, its peaks of shining gems,
- the caves in its long golden summits, and its flanks,
- and its long, fair valleys, the faultless ones searched
- in a single day as much as would take many long ages.
What the poem says
Because the monkeys were so many and so eager, they combed the whole of the Vindhya range, its jewelled peaks, caves, slopes and valleys, in a single day, a search that would otherwise have taken a very long time.