கம்பராமாயணம் 4616 · கிட்கிந்தா 13.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எல்லை மா கடல்களே - (பூமியைச் சுற்றிலும்) பெரிய எல்லை யாகவுள்ள கடல்களே; ஆகுமாறு எய்தினார் - தமக்கு ஒப்பாகும் என்று சொல்லுமாறு சென்ற அந்த வானரவீரர்கள்; மல்லல் மா ஞாலம் - வளமை மிக்க பெரிய பூமியிலுள்ள உயிர்களுக்கு; ஓர் மறு உறா வகையின் - எவ்விதத் துன்பமும் உண்டாகாத வகையில்; அச்சில் அல் ஓதியை - அந்தப் பொன்தகட்டையணிந்த இருண்ட கூந்தலையுடைய சீதையை, இருந்த உறைவிடம் - (அவள்) தங்கியிருந்த இடத்தை; தேடுவார் - தேடுபவர்களாய்; உலகினை - (அவ்விந்திய மலையின் பூமி முழுவதையும்; பொது இலா வகையினால் - தம்மையல்லாமல் வேறெவர்க்கும் எவ்விதத் தொடர்புமில்லாதபடி; எய்தினார் - சென்று அடைந்தார்கள்.
வானரர்கள் விந்தியமலையில் எந்த இடமும் விட்டுப்போகாதவாறு தாமே பரவிநின்று முழுவதும் சீதையைத் தேடினார்களென்பது. அம்சில் ஓதி - அஞ்சில் ஓதி என விகாரமாகலாம். சில் : மகளிர்தலையிலணியும் தகட்டணி. சில்அல் ஓதி : அன்மொழித் தொகைப் பன்மொழித்தொடர் உலகு : பரந்த பூமியின் ஒரு பகுதி. ஓதியை என்றதில் பொருந்திய இரண்டாம் வேற்றுமை உருபு பிரித்துக் காட்டப்பட்டது. இருந்த உறைவிடம் என்பது இருந்துறைவிடம் எனச் செய்யுட் சந்தம் நோக்கி அகரம் தொகுத்து இயையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that no harm should come to the rich, wide earth, seeking
- the place where she of the dark tresses with their golden ornament was dwelling,
- they filled that land so that no part of it was left to anyone else,
- and went on so that only the great boundary seas could be their likeness.
What the poem says
The monkeys spread out until they covered every bit of the Vindhya country, leaving no space unoccupied, yet they took care to do no harm to the land or its creatures.
Their multitude is compared to the oceans that encircle the earth. Cītai is described by her dark hair, which bears a small gold ornament.