கம்பராமாயணம் 4617 · கிட்கிந்தா 13.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அம்மதியினோர் - நல்லறிவுடைய அந்த வானரர்கள்; விண்டு போய் - (தனித்தனியே) பிரிந்து சென்று; இழிவர் - (சிலர்) இறங்கிச் செல்வர்: மேல் நிமிர்வர் - (சிலர்) மேலேறிச் செல்வர்; விண் படர்வர் - (சிலர்) வானத்தில் தாவிச் செல்வர்; வேர் உண்ட மா மரனின் - வேர்களால் நீரை உறிஞ்சும் மரங்களினிடத்தும்; அம்மலையின் வாய் - அந்த மலையினிடத்தும்; உறையும் நீர் மண்டு - தங்கிய நீர் நிரம்பப் பெற்ற; பார் அதனின் - பல இடங்களிடத்தும்; வாழ் உயிர்கள் - வாழுகின்ற உயிர்களில்; கண்டிலாதன - (அவ் வானர வீரர்களால்) தேடிக் காணப்படாதன இருக்குமானால் (அவை); அயன் கண்டிலாதன ஆம் - பிரமனால் படைக்கப் படாதவையேயாகும்.
மரஞ் செறிந்த இடங்களும் வெற்றிடமும் புனல் நிரம்பிய இடமுமாய் மூன்று பகுப்பாயுள்ள அந்த விந்தியமலை முழுவதிலும் பிரமனது படைப்பிற்கு உட்பட்ட எல்லாவுயிர்களையும் வானரர்கள் தேடிப் பார்த்தார்களென்பது.
பிரமன் படைக்காத பொருள்கள் இல்லை; அதுபோன்று இந்த வானர வீரர்கள் காணாத உயிர்களோ பொருள்களோ இல்லை. நீர் மண்டு பார்: ஓடை, சுனை முதலியன.
வேறு உரை: விண்டு போய் இழிவ - நிலத்தைத் துளைத்துக் கொண்டு பூமிக்குள் செல்லும் (பாம்பு முதலிய) ஊர்வனவும்; மேல் நிமிர்வ - நிலத்தில் வாழும் விலங்கினங்களும்; விண் படர்வ - ஆகாயத்தில் பறக்கும் பறவைகளுமாய் அம் மலையின் கீழும் மேலும் புடையிலும் உறையும் உயிர்களில் இவர்கள் கண்ணில் படாதன ஒன்றுமேயில்லை எனவும் உரை கூறலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Scattering, some went down, some climbed up, some sprang into the sky; among the great trees that drink through their roots,
- on that mountain, and over the land where standing water gathers,
- of the creatures living there, any that those wise ones
- did not see must be ones that Ayaṉ never made.
What the poem says
The monkeys split up, some going down, some climbing, some leaping through the air, and searched the forests, the open ground and the pools and streams of the mountain.
The hyperbole is that any creature they failed to see must be one that Ayaṉ, the Creator, never made. Another reading takes the first line as describing the creatures themselves: those that burrow underground, those that walk the earth and those that fly.