கம்பராமாயணம் 4618 · கிட்கிந்தா 13.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பார் சேகு அற - பூமியின் திண்மை சிதையுமாறு; தென்திசைக் கடிது செல்கின்றார் - தென்திசையிலே (சீதையைத் தேட) விரைந்து செல்லுகின்ற வானர வீரர்கள்; ஏழொடு ஏழு யோசனை ஏகினார் - பதினான்கு யோசனையளவு சென்று; மேதியின் நாகு சேர் - எருமை இளங் கன்றுகள் சேர்ந்துள்ள; மேக மாலையினொடும் விரவி - கரிய மேகங்களின் வரிசைகளோடு கலந்து; நருமதை யாறு - நருமதையென்னும் நதிக் கரையை; நண்ணினார் - சென்று அடைந்தார்கள்.
கடலில் படிந்து மேகங்கள் நீர் பருகுமென்று கூறுவது கவி மரபு. நாகு : எருமைக் கன்று
அங்குள்ள எருமைக்கன்றுகள் நீருண்ட காளமேகங்களோடு வேறுபாடு தோன்றாதவாறு நருமதை நீரில் படிகின்றன என்பதாம். வானரர்கள் பெருங்கூட்டமாய் இயங்குவதால் நிலத்தின் திண்மை சிதைந்தது என்பதைப் 'பார் சேகு அற' என்ற தொடர் விளக்கிற்று. சேரன் செங்குட்டுவனின் சேனை சென்ற போது நீலகிரி மலையின் முதுகு நெளிந்தது என்று சொல்லும் வருணனையை நினைவு கூர்க. (சிலப். கால்கோள். 82)
ஆங்கிலம் · English translationAI
Translation
- They went seven and seven yōjaṉas; so that the earth lost its firmness,
- hurrying swiftly towards the southern quarter,
- they reached, where young buffalo calves crowd in, mingled with lines
- of clouds, the river Narumatai.
What the poem says
Fourteen yōjaṉas further south, the monkeys reach the Narumatai, the Narmadā river. So many of them are marching that the solid earth seems to give way beneath them, as the Cilappatikāram says the Nilgiri hills bent under the army of the Cēra king Ceṅkuṭṭuvaṉ.
In the river, dark buffalo calves lie in the water among dark rain-clouds that have come down to drink, and the two cannot be told apart. Clouds drinking from water is a poetic convention.