கம்பராமாயணம் 4619 · கிட்கிந்தா 13.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அன்னம் ஆடு இடங்களும் - அன்னப் பறவைகள் விளையாடும் இடங்களையும்; அமரர் நாடியர் - தேவ மாதர்களான அரம்பை முதலிய பெண்கள்; துன்னி ஆடு இடங்களும் - வந்து நீராடும் இடங்களையும்; துறக்கம் மேயவர் - சொர்க்கலோகத்திலுள்ள வானவர்; முன்னி ஆடு இடங்களும் - வந்து சஞ்சரிக்கும் இடங்களையும்; சுரும்பு மூசு தேன் - சுரும்புகளும், நறுமண மலர்களில் மொய்க்கும் தேன் என்ற வண்டுகளும்; பன்னி ஆடு இடங்களும் - பாடித் திரிகின்ற இடங்களையும், பரந்து சுற்றினார் - துழாவித் தேடித் திரிந்தார்கள்
நருமதையாற்றின் பெருஞ்சிறப்பாலும், அதனைச் சார்ந்த இடங்களின் மிக்க இனிமையாலும் அங்கே தேவமாதர்களும், தேவர்களும் வரலாயினர் என்பது. சுரும்பு, தேன்: வண்டின் வகைகள். சுரும்பு எனும் வண்டுகள் எல்லாப்பூமணத்திலும் செல்லும் தன்மையன என்றும், தேன் என்னும் வண்டுகள் நறுமண மலரிடத்தே மட்டும் செல்லும் தன்மையன என்றும் கூறுவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The places where swans sport, the places where the women of the gods' land
- come together to bathe, the places where those who dwell in heaven
- come to roam, and the places where the bees and the honey-bees swarm
- and hum and play: all these they spread over and circled.
What the poem says
The banks of the Narumatai are so lovely that heavenly women such as Arampai come down to bathe there and the gods come to stroll. The monkeys search all of it: the swans' pools, the bathing places of the celestials and the flowering groves full of humming bees.
Tamil distinguishes two kinds of bee here: one that visits any flower, and one that seeks only fragrant ones.