கம்பராமாயணம் 4620 · கிட்கிந்தா 13.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பெறல் அருந் தெரிவையை - பெறுதற்கு அரிய சீதையை; நாடும் பெற்றியார் - தேடும் தன்மையுடையவர்களான வானரர்கள்; அறல் நறுங் கூந்தலும் - கருமணலாகிய நறுமணமுள்ள அவளது கூந்தலையும்; அளக வண்டுசூழ் நிறை - கூந்தல் போலக் கருநிறமுள்ள வண்டுகள் சூழ்ந்து நிறைந்துள்ள; நறுந்தாமரை முகமும் - தாமரை மலராகிய அவளது முகத்தையும்; நித்தில முறுவலும் - (அலைகளால் கொழிக்கப்படுகின்ற) முத்துக்களாகிய அவளுடைய பற்களையும்; காண்பர் - காண்பார்கள்; முழுதும் காண்கிலார் - (ஆனால்) சீதையின் உருவ முழுவதையும் ஒருசேரக் காணாதவரானார்கள். ஆல் - அசை.
சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்கள் நருமதையாற்றின்கரையில் அச் சீதையின் உருவ முழுவதையும் பார்க்கமுடியாமல் அவளது முகத்திற்கும் அந்த முகத்திலுள்ள உறுப்புகளுக்கும் ஒப்பான சில பொருள்களை மட்டுமே கண்டனர்; தாம் தேடிவந்த சீதையின் முழுஉருவத்தையும் நிகர்த்தனவற்றைக் காணவில்லை. போலிகளிலும் முழுமையானவற்றை - சீதைக்கு முழுமையாக ஒப்பு கூறத்தக்கனவற்றை வானரர் காணவில்லை.
நருமதையாற்றில் கருமணல் சீதையின் கூந்தலையும், தாமரை மலர்கள் முகத்தையும், அதன் கரையில் கிடக்கும் முத்துக்கள் பற்களையும் ஒக்கும் என்பது. அளக வண்டுசூழ் தாமரைமுகம் - உவமையை அங்கமாகக் கொண்ட உருவகம். அறற் கூந்தல், நித்தில முறுவல் - உருவகம். காண்பரால் முழுதும் காண்கிலார்: முரண்தொடை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The searchers for the lady so hard to win
- saw her fragrant hair in the dark river-sand, and, ringed by bees like curling locks,
- her face in the full and fragrant lotus, and her pearl
- smile; yet the whole of her they did not see.
What the poem says
Along the Narumatai, the monkeys keep glimpsing parts of Cītai: the dark sand of the riverbed is like her hair, a lotus circled by dark bees is like her face framed by curls, and the pearls washed up on the banks are like her teeth.
They find all these likenesses scattered about, but nowhere do they find Cītai herself. The verse turns on the contrast between seeing and not seeing.