கம்பராமாயணம் 4621 · கிட்கிந்தா 13.10

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1செருமத யாக்கையர் திருக்கு இல் சிந்தையர்
தரும தயாவினைத் தழுவும் தன்மையர்
பொரு மதயானையும் பிடியும் புக்கு உழல்
நருமதை ஆகிய நதியும் நீங்கினார்.

பொருள் · Meaning in Tamil

செரு மத யாக்கையர் - போர் புரிவதில் எக்களிப்புக் கொண்ட உடம்பினையுடையவர்களும்; திருக்கு இல் சிந்தையர் - மாறுபாடற்ற மனமுடையவர்களும்; தருமம் தயா இவை தழுவும் தன்மையர் - தருமமும் அருளும் இயல்பாக அமைந்த தன்மையுடையவர்களுமாகிய வானரர்கள்; பொரு மத யானையும் - போர் செய்கின்ற மதங் கொண்ட ஆண்யானைகளும்; பிடியும் - பெண் யானைகளும், புக்கு உழல் - புகுந்து விளையாடுகின்ற; நருமதை ஆம் எனும் நதியை - நருமதை என்னும் பேர் கொண்ட ஆற்றை; நீங்கினார் - கடந்து சென்றார்கள்.

யாக்கை : உதிரம் முதலான எழுவகைத் தாதுக்களால் கட்டப்பட்டது என்று உடலுக்குக் காரணக்குறி. திருக்கு இல்சிந்தையர்: (குரங்குத் தன்மையால்) மாறாமல் ஒருபடித்தாய மனமுடையவர் ஆம் :அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They of bodies exultant in battle, of minds without crookedness,
  2. of a nature that holds to dharma and compassion,
  3. left behind the river called Narumatai, where fighting, rutting tuskers
  4. and their mates plunge in and roam.

What the poem says

The monkey warriors cross the Narumatai, where bull elephants and their cows bathe and play. The poet praises the searchers: strong and eager for battle, yet steady of mind, unlike the proverbial fickleness of monkeys, and devoted to righteousness and compassion.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceru mata yākkaiyar tirukku il cintaiyar
taruma tayā ivai taḻuvum taṉmaiyar
poru mata yāṉaiyum piṭiyum pukku uḻal
narumatai ām eṉum natiyai nīṅkiṉār.