கம்பராமாயணம் 4622 · கிட்கிந்தா 13.11

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாம கூடத் திரைத் தீர்த்த சங்கம
நாம கூடப் பெருந்திசையை நல்கிய
வாம கூடச் சுடர்மணி வயங்குறும்
ஏமகூடத் தடம் கிரியை எய்தினார்.

பொருள் · Meaning in Tamil

தாமகூடத் திரைதீர்த்த சங்கம் ஆம் - ஒளியமைந்த சிகரங்களிலிருந்து தோன்றுகின்ற அலைகளையுடைய ஆறுகளின் சங்கமம் ஆகிய; நாம கூடு அப்பெருந் திசையை நல்கிய - புகழுடன் கூடியதும் பெரியதும் ஆகிய அத்திசையைப் பாதுகாப்பதாகிய; வாம கூடச் சுடர் மணி வயங்குறும் - அழகிய தொகுதியாகிய ஒளியையுடைய இரத்தினங்கள் விளங்குகின்ற; ஏம கூடத் தடங்கிரியை - ஏமகூடமென்னும் பெரிய மலையை; எய்தினார் - போய் சேர்ந்தார்கள்.

பல புண்ணிய ஆறுகளின் சங்கமமும் மிகச் சிறந்த இரத்தினங்களும் நிரம்பப் பெற்றது ஏமகூடமலை என்பது. ஏமகூடம் - எட்டுக் குலகிரிகளில் ஒன்று. மேருவின் தெற்கு இமயத்துக்கப்பால் 9000 யோசனையில் உள்ளது என்ற அபிதான சிந்தாமணி குறிப்பிடுகிறது. தாமம் - ஒளி; நாமம் - புகழ்; வாமம் - அழகு; ஏமம் - பொன். திரிபு என்னும் சொல்லணி இப்பாடலில் வந்துள்ளது. முதலடியில் 'கூடம்' சிகரத்தையும், மூன்றாமடியில் தொகுதியையும் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The meeting-place of rivers whose waves pour down from its bright peaks,
  2. guardian of that great and famous quarter,
  3. where clusters of lovely, blazing gems shine,
  4. the great mountain Ēmakūṭam they reached.

What the poem says

Next the monkeys reach Ēmakūṭam, "the golden peak", counted among the eight great mountain ranges. Many sacred rivers flow down from it, and it is full of precious stones.

The verse is a sound game: each line contains kūṭam paired with a different first word, tāmam (light), nāmam (fame), vāmam (beauty) and ēmam (gold), and kūṭam itself means peak in one line and cluster in another.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāma kūṭat tirait tīrtta caṅkam ām
nāma kūṭu ap perun ticaiyai nalkiya
vāma kūṭac cuṭar maṇi vayaṅkuṟum
ēmakūṭat taṭaṅ kiriyai eytiṉār.