கம்பராமாயணம் 4623 · கிட்கிந்தா 13.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாடு உறு கிரிகளும் - (அந்த ஏமகூட மலை) பக்கத்திலுள்ள மலைகளும்; மரனும் - மரங்களும், மற்றவும் - பிற பொருள்களும்; சூடு உறு பொன் என - சுடச்சுடரும் பொன்போல; பொலிந்து தோன்றுற - விளங்கித் தோன்றும்படி; பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது - பெருமை மிக்க ஒளியைப் பரவச் செய்கின்றது; வீடு உறும் உலகினும் - சுவர்க்கலோகத்தைக் காட்டிலும்; விளங்கும் மெய்யது - மிகுதியாக ஒளி விளங்கும் தோற்றத்தையுடையது.
பொன் போன்ற நிறமுள்ள அந்த ஏம கூடத்தின் ஒளியால் அதன் பக்கமுள்ள பொருள்களெல்லாம் பொன்னிறமாகக் காணப்பட்டன என்பது அஃதாவது மலைகளும் மரமும் பிறவும் தமது இயற்கை நிறம் மாறி அருகிலுள்ள ஏமகூடத்தின் நிறத்தையடைந்தன, என்றார். இது பிறிதின் குணம் பெறலணி. பாடு: பெருமை. பொன்னுலகென்று அழைக்கப் பெறும் சுவர்க்கலோகத்திலுள்ள பொருள்கள் யாவும் பொன்மயமாக விளங்குமென்பது புராண நூற்கொள்கை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the hills beside it, the trees and all other things
- shine out like gold heated in the fire,
- it spreads abroad a great, blazing light;
- its form shines brighter even than the heavenly world.
What the poem says
Ēmakūṭam glows with such golden light that the neighbouring hills and trees take on its colour and look like gold glowing in a furnace. The figure is one in which things lose their own nature and take on that of something else.
It is said to shine even more than heaven, which the Purāṇas describe as a world made entirely of gold.