கம்பராமாயணம் 4624 · கிட்கிந்தா 13.13

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பறவையும் பல்வகை விலங்கும் பாடு அமைந்து
உறைவன கனகம் நுண் தூளி ஒட்டலால்
நிறைநெடு மேருவைச் சேர்ந்த நீர ஆய்ப்
புறம்நெடும் பொன் ஒளி மிளிரும் பொற்பது.

பொருள் · Meaning in Tamil

பாடு அமைந்து உறைவன - (அம் மலையானது) தன்னிடம் வந்து வாழுகின்ற; பறவையும் - பறவைகளும்; பல்வகை விலங்கும் - பல வகையான மிருகங்களும்; கனக நுண் தூளி ஒற்றலான் - (அம் மலையிலுள்ள) நுட்பமான பொன் துகள்கள் ஒட்டிக் கொள்வதால்; நிறை நெடு மேருவை - நிறைந்து ஓங்கியுள்ள பெரிய மேரு மலையை; சேர்ந்த நீர ஆய் - சேர்ந்த தன்மையுடையன என்று சொல்லுமாறு; பொறை நெடும்பொன் ஒளி - வலிமை மிக்க பொன்னின் ஒளியை; மிளிரும் பொற்பது - (எல்லாப்பொருள்களின் மேலும்) பெய்கின்ற பொலிவுடையது.

தன்னிடம் வாழும் பறவைகளும் விலங்குகளும் மேருவைச் சார்ந்த பொருள்கள்போலப் பொன்துகள் படியப்பெற்று விளங்குமாறு அப் பொருள்கள் எல்லாவற்றையும் பொன்மயமாகச் செய்வது ஏமகூடமலை என்பது. 'பனிமால் இமயப் பொருப்பகம் சேர்ந்த பொல்லாக் கருங்காக்கையும் பொன்னிறமாய் இருக்கும்' என்ற காரிகைத் தொடர் ஒப்பு நோக்கத் தக்கது. (யாப். காரிகை. 3) கனகம் : பொன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The birds and the many kinds of beasts that live there in their places,
  2. because the fine gold dust clings to them,
  3. look like creatures that have come to the vast, full Mēru;
  4. such is its splendour, flashing with abundant, mighty golden light.

What the poem says

Fine gold dust from the mountain settles on the birds and animals living there, so that they look like creatures of Mount Mēru, the golden mountain at the centre of the world.

The commentary cites a well-known saying from a Tamil prosody manual: even the ugly black crow that settles on the golden Himalaya looks gold.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṟavaiyum pal vakai vilaṅkum pāṭu amaintu
uṟaivaṉa kaṉaka nuṇ tūḷi oṟṟalāṉ
niṟai neṭu mēruvaic cērnta nīra āyp
poṟai neṭum poṉ oḷi miḷirum poṟpatu.