கம்பராமாயணம் 4625 · கிட்கிந்தா 13.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பரவிய கனக நுண் பராகம் - பரவியுள்ள பொன்னின் சிறுதுகள்கள்; பாடு உற - தம்மிடத்தில் பொருந்த, எரிசுடர்ச் செம்மணி - விளங்குகின்ற ஒளியையுடைய சிவந்த பதுமராக இரத்தினங்களின்; ஈட்டத்தோடு இழி அம்திரள் - தொகுதியோடு கீழே இறங்குகின்ற, அருவிகளும் - அருவிகளாகிய அழகிய கூட்டங்களும்; அலங்கு தீயிடை - எறிகின்ற நெருப்பிலே; உருகு பொன் - உருகிய பொன்னானது; பாய்வ போன்று - பாய்ந்தோடுவது போல; ஒழுகுகின்றது - ஒழுகப்பெறும் தன்மையது.
பொற்கொடிகள் பொருந்திச் செம்மணியின் நிறமமைந்த பெருகுகின்ற நீர்ப் பெருக்கிற்கு, நெருப்பிலுருக்கி ஓடவிட்ட பொன்னை உவமையாகக் குறித்தார்.
கனக பராகம்: பொன்துகள்; செம்மணி: மாணிக்கம். செம்மணிகளில் பொன்மயமான அருவிகள் பாய்வது, தீயினிடையில் பொன் உருகுவதுபோலுமென வருணித்தவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the fine gold dust scattered all about settling on them,
- falling together with heaps of blazing red rubies,
- its lovely masses of waterfalls
- flow like molten gold running through a leaping fire.
What the poem says
The mountain's waterfalls carry fine gold dust and tumble over masses of red rubies, so that the falling water looks like molten gold pouring through leaping flames. The image continues the picture of Ēmakūṭam as a mountain made entirely of gold and gems.