கம்பராமாயணம் 465 · பால 8.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று கூறிய பின்னர் - என்று முனிவன் ராமனைப் பாராட்டிக் கூறிய பின்பு; அவ்வெழில் மலர்க்கானத்து - அழகிய மலர்கள் நிறைந்த அந்தக் கானகத்தில்; தான் அருந்தவ முனிவரோடு - அரிய தவத்தை உடைய மற்ற முனிவர்களோடும் சேர்ந்து; அன்று உவந்து இருந்தான் - மகிழ்வுடன் தங்கி இருந்தான்; கோசலை குருசில் - கோசலை பெற்ற குமாரனான இராமன்; இன்று யான் செயும் பணி என்கொல் - இன்று, இனிமேல் நான் செய்யவேண்டிய பணி என்னவோ; பணி என - கட்டளை இட்டருளுக என்று; குன்றுபோல் குணத்தான் எதிர் - மலை போலும் அளவிடற்கரிய குணத்தவனான விசுவாமித்திரனிடம்; இசைத்தான் - கேட்பானாயினான்.
எழில்: அழகு. மலர்க்கானம்: மலரையுடைய கானகம். உவந்து: மகிழ்ந்து. இருத்தல்: தங்கியிருத்தல். இன்ப, துன்பங்களுக்குச் சலியாதிருக்கும் குணம் உடைமையால் “குன்றுபோல் குணத்தான்” என முனிவன் சிறப்பிக்கப்பட்டான் என்பர். குருசில்: பெருமைமிக்கோன் பணி: கட்டளை. இசைத்தான்: சொன்னான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- After he had said this, before the one whose virtue was like a mountain,
- who that day sat contentedly in that lovely flowering forest
- with the sages of rare austerity, Kōcalai's noble son
- said, What service shall I do now? Command me.
What the poem says
After the sage's words, Vicuvāmittiraṉ rests happily in the flowering grove with the other sages. He is called mountain-like in character because, like a mountain, he is unmoved by pleasure or pain.
Irāmaṉ, Kōcalai's son, comes before him and asks what task he should do next.