கம்பராமாயணம் 466 · பால 8.59

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"அரிய யான் சொலின் ஐய! நின்கு அரியது ஒன்று இல்லை;
பெரிய காரியம் உள; அவை முடிப்பது பின்னர்;
விரியும் வார் புனல் மருதம் சூழ் மிதிலையர் கோமான்
புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக” எனப் போனார்.

பொருள் · Meaning in Tamil

ஐய! அரிய யான்சொலின் - மேலோனே! அரிய செயல் என்று நான் சொல்வேனானால்; நிற்கு அரியது ஒன்று இல்லை - உனக்குச் செய்வதற்கு அரியசெயல் எதுவுமே இல்லை (ஆயினும்); பெரிய காரியம் உள - அரியபெரிய செயல்களும் உள்ளன; அவை முடிப்பது பின்னர் - அவற்றைச் செய்து முடிக்கத் தக்க காலம் பின்னால் வரப் போகிறது. (எனவே); வார்புனல் விரியும் - பெருகிவரும் நீர்நிறைந்துள்ள; மருதம் சூழ்மிதிலையர் கோமான் - மருத நிலங்கள் சூழ்ந்துள்ள மிதிலை நாட்டின் மன்னனான சனகன்; புரியும் வேள்வியும் காண்டும் நாம் - செய்கின்ற வேள்வி ஒன்றினையும் நான் சென்று பார்ப்போம்; எழுக - எழுந்து என்னுடன் வருவீர்களாக; என்று போனார் - (என்று கூறி அழைத்தேக) மூவரும் சென்றனர்.

சொலின்: சொல்லியன் என்பது தொகுக்கப்பட்டது 'ஐ' என்பதற்கு அழகு என்பதும் பொருள். எனவே 'ஐய' என்பதற்கு அழகனே என்பதும் பொருந்துவதே. ஒன்று: ஒரு சிறிதும் எனவும் கூறுவர் வார்புனல்: பெருகிவரும் நீர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Sir, if I were to name hard things, there is nothing hard for you;
  2. great deeds there are; accomplishing them comes later.
  3. Let us go and see the sacrifice performed by the king of Mithilai,
  4. ringed by fertile fields with broad flowing waters; rise! he said, and they went.

What the poem says

Vicuvāmittiraṉ replies that no task is too hard for Irāmaṉ. There are great deeds ahead, the destruction of Irāvaṇaṉ chief among them, but their time will come later.

For now, he proposes that they go to see the sacrifice being held by Caṉakaṉ, king of Mithilai, a land of rich, well-watered fields. The three set off. This closes the canto of the sacrifice and leads toward Irāmaṉ's meeting with Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"ariya yāṉ coliṉ aiya! niṟku ariyatu oṉṟu illai;
periya kāriyam uḷa; avai muṭippatu piṉṉar;
viriyum vār puṉal marutam cūḻ mitilaiyar kōmāṉ
puriyum vēḷviyum kāṇṭum nām eḻuka” eṉṟu pōṉār.