கம்பராமாயணம் 4656 · கிட்கிந்தா 13.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மற்றவரும் - (அங்கதன் முதலிய) மற்றை வானர வீரர்களும், அது மனக் கொள - (அனுமன் கூறிய) அந்தச் சொல் மனத்தில் பதியவே; வலித்தார் - (அவ்வாறே செய்ய) உறுதி கொண்டார்கள்; புரத்தின் இடை உற்றனர் - (யாவரும்) அந்த நகரத்தினிடையே சென்று; ஒண் சுடரினுள் - மிக்க ஒளியையுடைய (அந்நகரின்) நடுவில், நல்தவம் அனைத்தும் - சிறந்த தவம் முழுவதும்; ஓர் உரு நண்ணி - ஒரு பெண்ணுருவம் பெற்றாற்போல; ஒளி பெற்ற - ஒளி நிறைந்த; கற்றை விரி பொன் சடையினாளை - தொகுதியாக விரிந்த அழகிய சடையையுடையவளான சுயம்பிரபையை; எதிர் கண்டார் - கண்முன்னே கண்டார்கள்.
மற்று : அசை அந்த நகரத்தின் இடையில் தவம் ஓர் உருவம் எடுத்துவந்தாற் போன்ற சுயம்பிரபையை வானரவீரர்கள் கண்டனர் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The others too took his words to heart and steeled themselves;
- they came into the middle of the city; and there, within a bright radiance,
- as if all good penance had taken a single form and gained a body of light,
- they saw before them a woman with a great spread of golden matted hair.
What the poem says
Heartened by Aṉumaṉ, the monkeys press on to the centre of the city. There, in a blaze of light, they find a woman ascetic with spreading matted locks, so radiant that she seems to be penance itself in human form. She is Cuyampirapai (Svayamprabhā), whose story follows.