கம்பராமாயணம் 4658 · கிட்கிந்தா 13.47

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேர் அனைய அல்குல் செறிதிண் கதலி செப்பும்
ஊருவின் ஒடுங்கு உற ஒடுக்கி உற ஒல்கும்
நேர் இடை சலிப்பு அற நிறுத்தி நிமிர் கொங்கைப்
பாரம் உள் ஒடுக்கு உற உயிர்ப்பு இடை பரிப்ப.

பொருள் · Meaning in Tamil

தேர் அனைய அல்குல் - தேர்த்தட்டையொத்த அல்குலை, செறி திண் கதலி செப்பும் - ஒன்றோடு ஒன்று நெருங்கிய வலிய வாழை மரத்தைப் போன்ற; ஊருவினொடு - தொடைகளோடு; ஒப்பு உற ஒடுக்கி - ஒன்றாகப் பொருந்துமாறு அடக்கி வைத்தும்; உயிர்ப்பு இடை பரிப்ப - மூச்சைக் கட்டுவதனால், உற ஒல்கும் நேர்இடை - மிகவும் அசைகின்ற நுண்ணிய இடையை; சலிப்பு அற நிறுத்தி - சிறிதும் அசையாதவாறு நிறுத்தி; நிமிர் கொங்கைப் பாரம் - சாயாது நிமிர்ந்த முலைச்சுமை; உள் ஒடுக்கு உற - உள்ளே அடங்கி நிற்பவும்.

உயிர்ப்பிடை பரித்தல் இடை சலிப்பற நிற்றற்கும், முலைகள் ஒடுங்குவதற்கும் காரணமாகும். இங்குக் கூறப்படுவது யோகமுறையில் வளிநிலை என்பர். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி, என்னும் யோகப்பயிற்சி நிலைகளில் இங்கு பிராணாயாமம் குறிக்கப்பட்டது. 'உயிர்ப்பிடை பரித்தல்' என்பதுவே பிராணாயாமம். சலிப்பு: அசைவு, 'ஒடுக்கி' 'ஒடுக்குற' என்ற எச்சங்களும் 50ஆம் செய்யுளில் வரும் 'இருந்தனள்' என்பதனையே கொண்டு முடியும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. her chariot-broad hips drawn in and held close with her thighs, said to be like firm, close plantain stems,
  2. her slender waist, that sways so easily,
  3. held still without the least stir, and the weight of her upright breasts
  4. drawn inward, as she held her breath within,

What the poem says

Cuyampirapai sits perfectly still, legs drawn together, her slender waist motionless and her breasts drawn in as she holds her breath.

The commentary identifies this breath control as prāṇāyāma, one of the eight limbs of yoga, which it lists: restraint, observance, posture, breath control, withdrawal of the senses, concentration, meditation and absorption.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēr aṉaiya alkul ceṟi tiṇ katali ceppum
ūruviṉoṭu oppu uṟa oṭukki uṟa olkum
nēr iṭai calippu aṟa niṟutti nimir koṅkaip
pāram uḷ oṭuṅkuṟa uyirppu iṭai parippa.