கம்பராமாயணம் 4659 · கிட்கிந்தா 13.48

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாமரை மலர்க்கு உவமை சால்வுறு தளிர்க்கை
பூமருவு பொன் செறி குறங்கு இடை பொருந்த
காமம் முதல் உற்ற பகை கால்தளர ஆசை
நாமம் அழிய புலனும் நல் அறிவு புல்ல.

பொருள் · Meaning in Tamil

தாமரை மலர்க்கு உவமை - தாமரை மலருக்கு உவமையாகின்ற; சால்பு உறு - சிறப்பு வாய்ந்த; தளிர்க் கை - தளிர்போன்ற (தன் மெல்லிய) கைகள்; பூ மருவு - அழகு வாய்ந்த; பொன்செறி - பொன்னிறமான ஒன்றோடு ஒன்று நெருங்கிய; குறங்கிடை பொருந்த - தொடைகளிடத்தில் பொருந்தவும்; காமம் முதல் - காமம் முதலாக; உற்ற பகை கால்தளர - பொருந்திய உட்பகைகள் அழிந்தொழியவும்; ஆசை நாமம் அழிய - ஆசை என்னும் பெயரே அழியப்பெறவும்; புலனும் நல்லறிவு புல்ல - ஐம்பொறிகளும் (தீய வழியிற் செல்லாது) நல்லுணர்வைப் பொருந்தவும்.

சுயம்பிரபை தன் இரு கைகளையும் இரண்டு தொடைகளின்மேல் வைத்துக் கொண்டு, உட்பகையையொடுக்கிப் பற்றற்று மனத்தை யோகத்திற் செலுத்தியிருந்தாள் என்பது. காமம் முதல் உற்றபகை: காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற உட்பகைகள். 'காமம் முதலுற்ற பகை கால் தளர வாசை நாமம் அழிய' என்றதனால் 'பொய் கொலைகளவே காமம் பொருள்நசை இவ்வகை யைந்தும் அடக்கியது இயமம்' என்று சொல்லப்பட்ட இயமமும், 'புலனும் நல்லறிவு புல்ல' என்றதனால் 'பொறியுணர்வெல்லாம் புலத்தின் வழாமல் ஒரு வழிப்படுப்பது தொகைநிலைப் புறனே என்று கூறப்பெற்ற பிரத்தியாகாரமும் சொல்லப்பட்டவாறு அறியலாம். கால்தளர்தல் - அழிதல். ஒப்பு: 'காமம் வெகுளி மயக்கமிவை மூன்றின் நாமங் கெடக்கெடும் நோய்' - குறள்:360.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. her tender, shoot-like hands, worthy to be the lotus's own likeness,
  2. resting on her lovely, golden, close-pressed thighs,
  3. the enemies within, desire first among them, broken,
  4. the very name of longing destroyed, and her senses joined to true knowledge,

What the poem says

Her hands rest on her thighs. She has overcome the six inner enemies, desire, anger, greed, delusion, pride and envy; craving no longer exists for her even as a word, and her senses are turned towards right knowledge.

The commentary sees here the yogic disciplines of restraint and of withdrawing the senses, and compares a Tirukkuṟaḷ couplet (360): when desire, anger and delusion are destroyed even in name, suffering ends.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāmarai malarkku uvamai cālpuṟu taḷirk kai
pū maruvu poṉ ceṟi kuṟaṅkiṭai porunta
kāmam mutal uṟṟa pakai kāl taḷara ācai
nāmam aḻiya pulaṉum nal aṟivu pulla.