கம்பராமாயணம் 4660 · கிட்கிந்தா 13.49

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நெறிந்துநிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம்
செறிந்து சடை உற்றது தலத்தின் நெறி செல்லப்
பறிந்து வினை பற்று அற மனப் பெரிய பாசம்
பிறிந்து பெயரக் கருணை கண்வழி பிறங்க.

பொருள் · Meaning in Tamil

நெறிந்து - நெறிப்புக் கொண்டு; நிமிர் - நிமிர்ந்து: கற்றை நிறை - தொகுதியாக நிறைந்த; நெடு நீலம் ஓதி - நீண்ட கருமையான கூந்தலானது; செறிந்து சடை உற்றன - அடர்ந்த சடையாகத் திரண்டு அமைந்ததாகி; தலத்தில் நெறி செல்ல - பூமியிடத்தில் புரளவும், வினை பறிந்து பற்று அற - நல்வினை, தீவினைகள் ஆகிய இரண்டும் அடியோடு நீங்கவும்; மனப் பெரிய பாசம் - மனத்தில் உண்டாகக் கூடிய பெரிய பாசப்பற்று; பிறிந்து பெயர - விலகியொழியவும்; கருணை கண்வழி பிறங்க - அருளானது விழிகளில் தோன்றி விளங்கவும்.

வினை முடிபு: செல்ல, பற்றற, பெயர, பிறங்க, என்னும் எச்சங்கள் 50 ஆம் செய்யுளிலுள்ள 'இருந்தனள்' என்பதனையே கொண்டு முடியும். ஞான யோகத்தின்முன் கன்ம வினைகள் தீயின்முன் பஞ்சுபோலாகும் என்பது பற்றி 'வினை பறிந்து பற்றற' எனப்பட்டது. பாசம்: கயிறு - இங்கே உவமையாகு பெயராய் மனத்தைப் பிணிக்கும் பாசமாயிற்று. பூமியிற் கிடந்து புரள்வதெனச் சடைக்கற்றையின் நீளத்தைக் குறித்தார். அருளைக் கண்ணோட்டம் என்பார் ஆதலால், கருணை கண்வழி பிறங்க என்றார். பிறிந்து: அடியோடும் பெயர்க்கப்பட்டு. எதுகை நோக்கிப் 'பிரிந்து' என்ற சொல் 'பிறிந்து' என்றாயது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. her long, dark hair, curling and rising in a full mass,
  2. matted thick into locks and trailing along the ground,
  3. her karma uprooted and attachment ended, the great bonds of the mind
  4. torn away and gone, and compassion shining out through her eyes,

What the poem says

Her hair, once dark and curling, has grown into thick matted locks long enough to lie on the ground. Both good and bad karma have been plucked out by the roots, as cotton burns before fire, the bonds that tie the mind are cut, and compassion shines from her eyes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1neṟintu nimir kaṟṟai niṟai ōti neṭu nīlam
ceṟintu caṭai uṟṟaṉa talattil neṟicellap
paṟintu viṉai paṟṟu aṟa maṉap periya pācam
piṟintu peyarak karuṇai kaṇvaḻi piṟaṅka.