கம்பராமாயணம் 4661 · கிட்கிந்தா 13.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இருந்தனள் - (அவ்வாறு) இருந்தாள்; இருந்தவளை - அப்படி வீற்றிருந்த சுயம்பிரபையை வானரவீரர்கள்; எய்தினர் இறைஞ்சா - அணுகி வணங்கி; அருந்ததி எனத்தகைய சீதை அவளாக - அருந்ததி யென்று சொல்லத் தகுந்த கற்புடைய சீதையாகவே நினைத்து; பரிந்தனர் - (அவளிடம்) அன்பு பூண்டனர்: பதைத்தனர் - பரபரப்பு அடைந்தனர்; இவள் தேவி கொல் - (அனுமனைப் பார்த்து) இவள் சீதைதானா? பணித்த குறி - (இராமன்) கூறிய அங்க அடையாளங்களைக் கொண்டு; பண்பில் தெரிந்து உணர்தி - முறையாக ஆராய்ந்து தெளிந்து அறிவாயாக; எனலோடும் - என்றுகேட்ட அளவில்.
மாருதி உரைத்தான் என அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும். முன்னர் நகரையும், மாளிகையையும், குகையையும் கண்டு இராவணன் சீதையை ஒளித்த இடம் இவையோயென ஐயுற்ற வீரர்கள் இங்கும் சுயம்பிரபையின் அழகைக் கண்டு அவளைச் சீதையென மயங்கினர் என்பது. சீதையவள்: அவள் - பகுதிப் பொருள் விகுதி. அருந்ததி: வசிட்டரின் மனைவி; கற்புடைப் பெண்களுக்கு உவமை கூறப்படுபவள். இறைஞ்சா: செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So she sat; they came up to her as she sat and bowed,
- and, taking her to be Cītai, worthy to be called a second Aruntati,
- they were moved with tenderness and grew agitated: 'By the signs you were given, weigh it with care
- and judge; is this the queen?' they said, and at that,
What the poem says
The long sentence ends: so she sat. The monkeys approach and bow, and once again leap to a conclusion: this must be Cītai, chaste as Aruntati, the wife of the sage Vasiṣṭha and the model of a faithful wife.
Excited and full of feeling, they ask Aṉumaṉ to check her against the signs Irāmaṉ described. His reply follows in the next verse.