கம்பராமாயணம் 4662 · கிட்கிந்தா 13.51

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாருதி - அனுமன் (அந்த வீரர்களை நோக்கி), எக்குறியொடு எக்குணம் - (சீதைக்குரிய உறுப்பிலக்கணங்களிலும் குணங்களிலும்) எந்த அடையாளத்தை அல்லது எந்தக் குணத்தை; இவண் எடுத்து இசைக்கேன் - இவளிடம் இருப்பதாக எடுத்துச் சொல்வேன்? இக்குறியுடைக்கொடி - இத்தன்மையுடைய கொடிபோன்ற இப்பெண்; இராமன் மனையாளோ - இராமன் மனைவியாவாளோ? (ஆகமாட்டாள்); அக்கு வடம் - எலும்பு மாலையானது; முத்த மணி ஆரம் - (நவமணிகளில் ஒன்றான முத்தினால் ஆகிய மாலையோடு; அதன் நேர் நின்று ஒக்கும் எனின் - நேராக இருந்து உவமையாகுமானால்; ஒக்கும் - (இவளும் அச்சீதையை) ஒத்திருப்பாள்; என உரைத்தான் - என்று கூறினான்.

இராமன் தன்னிடம் கூறிய சீதையின் குணம், குறிகள் ஒன்றும் இவளிடம் இல்லை; ஆதலால், இவள் சீதையில்லையென அனுமன் துணிந்து கூறினான் என்பது. எலும்பு மாலைக்கும், முத்து மாலைக்கும் எந்த அளவு வேறுபாடுண்டோ, அந்த அளவு வேறுபாடு இவளுக்கும் சீதைக்கும் உண்டென்பது. அக்கு வடம்: சங்கு மணி மாலை என்றும் கொள்ளலாம். கொடி: உவமையாகுபெயர் இந்தப் பெண்ணும் சீதையும் ஒப்பாகார் என்பதற்கு அக்குமாலையும் முத்துமாலையும் ஒன்றையொன்று ஒக்குமென்று கூறியதால் பொய்த் தற்குறிப்பணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Which sign, which quality could I point to in her here?
  2. Is this creeper with these marks the wife of Irāmaṉ?
  3. If a string of bone beads, set beside a necklace of pearls and gems,
  4. matches it, then she matches,' said Māruti.

What the poem says

Aṉumaṉ, holding Irāmaṉ's detailed description in mind, sees at once that none of Cītai's marks or qualities are present in this woman.

He says so politely but decisively: she resembles Cītai only as much as a string of bone or conch beads resembles a necklace of pearls and precious gems.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ek kuṟiyoṭu ek kuṇam eṭuttu ivaṇ uraikkēṉ?
ik kuṟiyuṭaik koṭi irāmaṉ maṉaiyāḷō?
akku vaṭam muttam maṇi āram ataṉ nēr niṉṟu
okkum eṉiṉ okkum' eṉa māruti uraittāṉ.